இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 31 ஜூலை, 2023

மகர ராசிக்கு பயன் தரும் வாழ்நாள் பரிகாரங்கள்..

 ராசி மண்டலத்தில் இடம்பெற்றுள்ள பத்தாவது ராசி மகரம். மகர ராசியின் அதிபதி சனி.

மகர ராசிக்கு, சுக்கிரன் மற்றும் புதன் நட்பு கிரகங்கள். சந்திரன் மற்றும் செவ்வாய் பகை கிரகங்கள்.

ஆகவே, நட்பு கிரகங்களின் காரகத்துவம் உள்ள பொருட்கள், நிறங்கள், இடங்கள் போன்றவை நன்மை பயக்கும். பகை கிரகங்களின் காரகத்துவங்கள் நன்மை அளிக்காது.

அதன்படி, சுக்கிரனுக்கு உரிய பிங்க், புதனுக்கு உரிய பச்சை நிறங்களில் உள்ள ஆடைகள் மற்றும் கைக்குட்டைகளை பயன்படுத்தலாம்.

செவ்வாய் மற்றும் சந்திரனுக்கு உரிய சிவப்பு மற்றும் வெள்ளை நிற ஆடைகள் மற்றும் கைக்குட்டைகளை தவிர்க்கலாம்.

.தடைகள் மற்றும் இடையூறுகள் அகல, வெள்ளை மற்றும் சிவப்பு    நிறத்தில் உள்ள அரையடி நீள ரிப்பன்களை எடுத்து, திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமைகளில், கத்தரிக்கோலால் துண்டு துண்டாக வெட்டிப் போடலாம்.

அதேபோல், பச்சரிசி மற்றும் துவரை ஆகியவற்றை கொஞ்சம் எடுத்து, திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமைகளில் ஒரு கல்லில் வைத்து இடித்து போடலாம்.

மேலும், சந்திரன் மற்றும் செவ்வாய் ஆதிக்கம் நிறைந்த கோயில்களுக்கு அடிக்கடி செல்வதை தவிர்க்க வேண்டும்.

இவை அனைத்தும் அனுபவம் நிறைந்த ஜோதிடர்கள் கண்டறிந்த  எளிய பரிகார முறைகள் ஆகும்.

வடஇந்தியாவின் மிகப்பழமையான லால் கிதாப் என்ற சிவப்பு நூல் மகர ராசிக்கு கூறும் பரிகாரங்கள் சிலவற்றை பார்ப்போம்.

மகர ராசிக்காரர்கள் தங்களுடைய அதிர்ஷ்டத்தை பெருக்கிக் கொள்ள, ஏழைகள் மற்றும் பிச்சை கேட்போருக்கு வாழைப்பழம், பருப்பு மற்றும் இனிப்பு வகைகளை தானம் செய்வது நல்லது.

பாலும் சர்க்கரையும் கலந்த நீரை, ஆல மர வேரில் ஊற்றி,  அதில் இருந்து மண்ணை எடுத்து நெற்றியில் இட்டுக்கொள்ள செல்வ வளம் பெருகும்.

திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் ஆக, அருகில் உள்ள சலவை தொழிலாளர்களுக்கு புத்தாடை எடுத்துக் கொடுப்பது நல்லது.

அடுத்து மகர ராசி மற்றும் லக்னத்திற்கு, சனிக்குரிய நீலக்கல், சுக்கிரனுக்கு உரிய வைரம், புதனுக்கு உரிய மரகதம் ஆகியவை உகந்த ரத்தினங்கள் ஆகும்.

ராசிக்கற்களை அணியும்போது, அனுபவம் நிறைந்த ஜோதிடர்களின் ஆலோசனைப்படி, குறை இல்லாத கற்களை தேர்வு செய்து அணிய வேண்டும்.

அவரவருக்கு நடக்கும் தசா புத்திகள் மற்றும் கோச்சார கிரக நிலைகள் காரணமாக, பலன்கள் சாதகமாகவே அல்லது பாதகமாகவோ இருக்கலாம்.

இருந்தாலும், மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்களை அகற்றி நேர்மறை எண்ணங்களை வளர்ப்பது அனைவருக்கும் நன்மை தரும். அதுவே, விதியை மதியால் வெல்லும் ரகசியம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கிரஹங்களும் அதன் மரங்களும்

  பெரிய மரங்கள், மருந்து செடிகள், கோதுமை, நெல், வேர்க்கடலை, தென்னை, ஜாதிக்காய், மசாலா செடிகள், ஓமம், மிளகு, பெரிய காடுகள், நெல்லி, மணிபுங்கம...