பெரிய மரங்கள், மருந்து செடிகள், கோதுமை, நெல், வேர்க்கடலை, தென்னை, ஜாதிக்காய், மசாலா செடிகள், ஓமம், மிளகு, பெரிய காடுகள், நெல்லி, மணிபுங்கம், வெண், தேக்கு, வேங்கை மரம், வாதநாராயண மரம், எட்டி மரம், புங்க மரம், பலா மரம், பனைமரம், செந்தாமரை, பாலைவன முட்செடிகள், புதர்கள், மரங்கள் போன்றவை அனைத்தும் சூரியன் குறிக்கும் தாவரங்கள் ஆகும்.
அஸ்வாரூடாவாராஹி ஜோதிட வாஸ்து நீர் ஊற்று மையம்
ஜோதிடர் சுரேஷ்'
இந்த வலைப்பதிவில் தேடு
ஞாயிறு, 19 மே, 2024
கிரஹங்களும் அதன் மரங்களும்
சனி, 12 ஆகஸ்ட், 2023
ஜோதிடத்தில் 12 கட்டம் 9 கிரகம் வைத்து எப்படி பலன் சொல்வது !
முதல் வீடு :
இதை வைத்து ஜாதகருடைய நிறம், உருவம், உயரம், குணாதிசயங்கள் முதலியவற்றை அறியலாம். ஜாதகர் ஒல்லியானவரா, இல்லை பருமனானவரா, கோபம் உள்ளவரா, இல்லை சாந்தமானவரா என்றும் அறியலாம். அவர் உடல் நலத்தைப் பற்றியும் அறியலாம். அவர் வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்குப் போவாரா இல்லை தாழ்ந்த நிலைக்குப் போவாரா, என்பது பற்றியும் அறியலாம். உடல் பாகத்தில் தலையைக் குறிப்பது முதல் வீடு தான். ஒருவர் சொந்த ஊரில் வாழ்வாரா அல்லது அந்நிய தேசத்தில் வாழ்வாரா என்பது பற்றியும் முதல் வீட்டை வைத்துத்தான் சொல்ல வேண்டும். முதல் வீட்டில் யார், யார் இருக்கிறார்கள், முதல் வீட்டின் அதிபதி எங்கு இருக்கிறார் அதாவது இலக்கினாதிபதி எங்கு இருக்கிறார், முதல் வீட்டை எந்தெந்த கிரகங்கள் பார்க்கின்றன என்பதை வைத்தும் பலன் சொல்ல வேண்டும்.
இரண்டாவது வீடு :
மூன்றாம் வீடு :
நான்காம் வீடு :
5-ம் வீடு : இதை புத்திர ஸ்தானம் என்று அழைப்பார்கள். இதைப் பூர்வ புண்ணிய ஸ்தானம் என்றும் அழைக்கல்லாம். அதாவது போன ஜென்மத்தில் ஒருவர் நல்லது செய்தவரா இல்லையா என்று இந்த வீட்டைக் கொண்டு முடிவு செய்யலாம். ஒருவருக்குக் குழந்தைகள் உண்டா அல்லது இல்லயா என்றும் முடிவு செய்யலாம். ஒருவருக்குக் கலைத்துறையில் நாட்டம் இருக்கிறதா அல்லது இல்லயா என்பது பற்றியும் இந்த வீட்டைக்கொண்டு முடிவு செய்யலாம். அதே போன்று, சினிமா, டிராமா, லாட்டரி, குதிரைப்பந்தயம், ஆகியவற்றையும் இந்த வீடுதான் குறிக்கும். ஒருவர் காதலித்துத் திருமணம் செய்வாரா இல்லையா என்பது பற்றியும் இந்த வீட்டைக் கொண்டு முடிவு செய்யலாம். ஆன்மீக வாழ்க்கையையும் இந்த வீட்டைக் கொண்டு தீர்மானம் செய்யலாம். வேதங்கள், மந்திரங்கள் ஆகியவற்றையும் இந்த வீட்டைக் கொண்டு தீர்மானம் செய்யலாம்.
6-ம் வீடு : கடன், வியாதி, உண்ணும் உணவு , வேலை செய்யும் இடம், ஒருவருடைய வேலைக்காரர்கள் ஆகிய வற்றையும் இந்த வீட்டைக் கொண்டு சொல்லலாம். கவலைகள், துக்கங்கள் தாய் மாமன் ஆகியவற்றைக் குறிப்பது இந்த வீடு தான். உதாரணமாக ஒருவருக்குக் கன்னியா இலக்கினம் எனக் கொள்ளுங்கள். இலக்கினாதிபதி புதன் 6-ம் வீடான கும்பத்தில் இருக்கிறார் எனக் கொள்ளுங்கள். புதன் 1-ம் வீட்டிற்கு அதிபத்யாகி 6-ம் வீட்டில் இருக்கிறார். அவர் உடல் நிலையில் நிச்சயமாகக் கோளாறு இருக்கும். ஏனெனில் புதன் 1-ம் வீட்டையும் 6-ம் வீட்டையும் குறிக்கிறார். ஆக இவர் உடலில் ஏதோகோளாரு இருக்கிறது எனக் கொள்ள வேண்டும். சரி! 2-ம் வீட்டின் அதிபதி சுக்கிரன் 6-ம் வீட்டில் இருக்கிறார் எனக் கொள்ளுங்கள். 6-ம் வீடு Employment என்று சொல்லுகின்ற வேலையைக் குறிக்கிறது. 2-ம் வீடு தனத்தைக் குறிக்கிறது. ஆகவே இவர் வேலைக்குச் சென்று பணம் சம்பாதிப்பர் எனக் கொள்ளலாம். இவ்வாறாக 6-ம் வீட்டிலுள்ள கிரகம் மற்ற எந்த வீட்டுடன் சம்மந்தம் கொண்டுள்ளதோ அதை வைத்துப் பலன் சொல்ல வேண்டும்.
7-ம் வீடு : திருமணத்தைக் குறிக்கும் வீடு இதுதான். வியாபாரத்தைக் குறிக்கும் வீடும் இது தான். ஒருவர் மரணத்தைக் குறிக்கும் வீடும் இது தான். பிரயாணத்தைக் குறிக்கும் வீடும் இது தான். ஒருவர் ஜாதகத்தில் 7-ம் வீட்டில் சனி இருக்கிறது எனக் கொள்ளுங்கள். சனிதான் எதையும் தாமதப் படுத்துபவர் ஆயிற்றே! ஆக இவருக்குத் திருமணம் தாமதம் ஆகும் எனக் கூறலாம். உதாரணமாக கடக இலக்கினக்காரர் ஒருவருக்கு 7-ம் இடமான மகரத்தில் சனி இருக்கிறது எனக் கொள்வோம். சனியானவர் 7-ம் வீட்டிற்கும், 8-ம் வீட்டிற்கும் அதிபதி. 7-ல் இருக்கிறார். அவர் திருமணத்தைத் தாமதப் படுத்துவதோடு சில சங்கடங்களையும் திருமணத்திற்குப் பிறகு கொடுப்பார். ஏனெனில் சனி 8-ம் வீட்டிற்கும் அதிபதியல்லவா! சரி! சனிக்குப் பதிலாக 6-ம் வீடு, 9-ம் வீட்டிற்கு அதிபதியாகிய குரு இருக்கிறார் எனக் கொள்ளுங்கள். திருமண வாழ்வு எப்படி இருக்கும்? 6-ம் வீடு என்பது 7-ம் வீட்டிற்குப் 12-ம் வீடு அல்லவா! திருமண வாழ்வு சுகப்படாது. பிரச்சனைகள் நிறைந்ததாக இருக்கும்.
8-ம் வீடு : ஒருவரின் ஆயுளைக் குறிக்கும் வீடு இது தான். பிதுரார்ஜித சொத்துக்கள், உயில்கள், இன்ஷ்ஷ¤ரன்ஸ், கிராட்டுவிட்டி, போனஸ் ஆகியவைகளைக் குறிக்கும் வீடு இதுதான். ஒருவர் மரணம் இயற்கையானதா அல்லது துர்மரணமா என்பதையும் இந்த வீட்டைக் கொண்டு அறியலாம். துன்பம், துக்கம், தோல்வி, தண்டனை, தடைகள், ஜெயில் தண்டனை, இவைகளையும் அறியும் வீடு இதுதான். இந்த வீட்டை "துஸ்தானம்" எனக் கூறுவர்கள். 8-ம் வீட்டில் சனி இருந்தால் ஒருவருக்கு தீர்க்காயுசு எனக் கொள்ளலாம். குரு இருந்தாலும் தீர்க்காயுசு எனக் கொள்ளலாம். பொதுவாக 8-ம் வீட்டில் உள்ள கிரகங்களோ, அல்லது 8-ம் வீட்டிற்கு அதிபதியோ தங்கள் தசா, புக்திகளில் நல்லதைச் செய்யாதென்பது பலரின் அபிப்பிராயம்.
9-ம் வீடு : தகப்பனர், போன ஜென்மத்தில் ஒருவர் செய்த பூர்வ ஜென்ம புண்ணியங்கள், பாபங்கள், நீண்ட பயணம், தெய்வ தரிசனம் செய்தல், உயர்கல்வி, முன்பின் தெரியாதவர்கள், ஆகியவற்றைக் குறிப்பது இந்த வீடு தான். உதாரணமாக 9-ம் வீட்டில் ஒருவருக்கு சனி, செவ்வாய் போன்ற பாப கிரகங்கள் இருக்கிறது எனக் கொள்ளுவோம். நிச்சயமாக அவருக்குத் தகப்பனார் அனுசரணையாக இருக்க மாட்டார். 9-ம் வீட்டைத் தவிர சூரியனின் நிலையையும் நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் சூரியன் பிதுர்காரகனல்லவா? 9-ம் வீட்டில் பாப கிரகங்கள் இருக்குமேயாகில் அந்த வீட்டின் காரகத்துவங்கள் எல்லாம் கெட்டு விடும்.
10-ம் வீடு : ஒருவரின் ஜீவனம், கெளரவம், சபைகளில் முக்கியத்துவம் ஆகியவற்றை 10-ம் வீட்டைக் கொண்டுதான் சொல்ல வேண்டும். தொழிலில் முன்னேற்றம், பதவி உயர்வு ஆகியவற்றையும் இதைக் கொண்டேதான் சொல்ல வேண்டும். ஒருவருக்கு அரசியல் நல்லபடியாக இருக்குமா அல்லது இருக்காதா என்றும் இந்த வீட்டைக் கொண்டுதான் சொல்ல வேண்டும். இதைக் கர்மஸ்தானம் என்றும் கூறுவார்கள். தாயார், தகப்பனாருக்குச் செய்யும் கர்மங்களையும் இந்த வீட்டைக் கொண்டுதான் சொல்ல வேண்டும். ஒருவரின் எஜமானர், அரசாங்கம் இவைகளையும் இந்த வீடுதான் குறிக்கிறது.
11-வது வீடு : இதை லாபஸ்தானம் என்று கூறுவார்கள். நமக்கு வரக்கூடிய லாபங்களையும், சுகங்களையும் அளிக்கக் கூடியது இந்த வீடுதான். மூத்த சகோதரத்தைப் பற்றியும் இந்த வீட்டை வைத்துக் கூறலாம். நண்பர்களையும் இந்த வீட்டை வைத்துத்தான் கூற வேண்டும். நல்ல கிரகங்கள் இந்த வீட்டில் இருந்தால் நல்ல வைத்துத்தான் கூற வேண்டும். நல்ல கிரகங்கள் இந்த வீட்டில் இருந்தால் நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள். பொதுவாக வாழ்க்கையில் என்ன மிச்சம் என்பதை இந்த வீட்டை வைத்துத்தான் கூற வேண்டும். 11-ம் வீட்டிற்குடைய கிரகம் 5-ம் வீட்டில் இருந்தால் புத்திரத்தால் லாபம் எனக் கொள்ளலாம். அதே 11-ம் வீட்டிற்குடைய கிரகம் 10-ல் இருந்தால் நல்ல ஜீவனம் எனக் கொள்ளலாம். அதே போல் 11-க்குடைய கிரகம் எந்த வீட்டில் இருந்தாலும் அந்த வீட்டிற்கு நல்லது எனக் கொள்ள வேண்டும்.
12-வது வீடு: இதை மோட்ச ஸ்தானம் என்று சொல்லுவார்கள். இதை விரய ஸ்தானம் என்றும் சொல்லுவார்கள். நமக்கு வரக்கூடிய செலவுகள், நஷ்டங்கள் எல்லாவற்றையும் இந்த வீட்டை வைத்தே சொல்லவேண்டும். துன்பம், பாவங்கள், வறுமை, துரதிஷ்டம், ஆகியவையும் இந்த வீட்டை வைத்தே சொல்ல வேண்டும். மறைமுக எதிரிகளையும் இந்த வீட்டை வைத்தே சொல்ல வேண்டும். ஒருவருக்கு ஜெயில் வாசம், உள்ளதா அல்லது இல்லையா என்பதையும் இந்த வீட்டை வைத்துத்தான் கூறவேண்டும். கடனைத் திருப்பிக் கொடுத்தலையும், முதலீடு செய்வதையும் இந்த வீட்டை வைத்துத்தான் கூற வேண்டும்.
நாம் மேலே 12 வீடுகளின் முக்கியமான காரகத்துவங்களை மட்டும் பார்த்தோம். இது ஜோதிடத்தில் ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்குப் பயன் படும். இந்த ஆரம்ப கட்டத்தைக் கடந்தவர்கள் "பிருஹத் ஜாதகம்", "பலதீபிகை", "உத்திரகாலாம்ருதம்" ஆகிய நூல்களைப் படிக்க வேண்டும். அப்போதுதான் ஜோதிட அறிவு விருத்தியாகும்.
புதன், 9 ஆகஸ்ட், 2023
12 பாவங்கள் காரகத்துவ பலன்கள்
1 முதல் 12 பாவம் வரை காரகத்துவம்முதல் பாவம்1, இது லக்னம் எனறும், ஜென்ம லக்னம் எAறும் அழைக்கபடும். இதன் மூலம்சாதகனின் உயிர், தேகம், சிரசு, குணம், நிறம், உருவம், ஆகியன பற்றிஅறியலாம்இரண்டாம் பாவம்2, இது குடும்ப ஸ்தானம் வாக்கு ஸ்தானம் தனஸ்தானம் என அழைக்கப்படும்.இதன் மூலம் சாதகனின் வசதி, பணவசதி, கல்வி, பேச்சு, உணவு, வலதுகண்,முகம், குடும்பம், சஸ்திரஞானம், பல வரிசை, கடித வரவுகள், பொன்ஆபரணங்கள், எதிர்பாரா யோகங்கள்.முன்றாம் பாவம்3, இது தைரிய வீரிய ஸ்தானம், இளைய சகோதர ஸ்தானம், எனஅழைக்கப்படும.f இதன் மூலம் உடன் பிறந்த சகோதர சகோதரிகள் மற்றும் சாதகர்வீரம் உள்ளவரா, கோழையா, எனபதையும் வலது காது, மார்பு, இரக்க சுபாவம்,சங்கிதஞானம், முனனோர் கடன், மதபேதம், கனவுகள், ஆகியன பற்றி அரியலாம்.நான்காம் பாவம்4, இது தாயார் ஸ்தானம் சுக வாகன ஸ்தானம் என அனழக்கப்படும். இதன்மூலம் தாயாரின் உடல்நிலை சாதகனுக்கு வாழ்வில் கிடைக்கும் சுகங்கள், இல்லறசுகம,f மோட்டார் ஸ்கூட்டர், போன்ற வாகன சுகம், வீடு, நிலம், அனுபவித்தல்கல்விநிலை, பசு, போன்ற உயிரின வளாப்பு இருதயம் உறவினர், நண்பர்கள்,துக்கம், புதையல், ஏரி, கிணறு, தோப்பு, மருமகன், சம்பந்தபட்ட விசயங்களைஅறியலாம் இது உடலில் மார்பை குறிக்கும்.ஐந்தாம் பாவம்5, இது பஞ்சம ஸ்தானம் புத்திர ஸ்தானம், பூர்வபுண்ணிய ஸ்தானம்யோகஸ்தானம், கீaத்தி பிரதாப ஸ்தானம் என்றாலும் அழைக்கபடும்.இதன் மூலம் ஒருவரின் குண இயல்புகள், ஆஸ்திகரா, நாஸ்திகரா,குழந்தைபாக்கியம,f வயிற்றுக்கோளாறுகள,fபிரபுத்துவம்,தாயமாமன், மந்திரஉபதேசம்,யோக அப்பியாசம், சீட்டு சொக்கட்டான், இவற்றால் ஏற்படும். லாபம்வணங்கவேண்டிய தெய்வம் தெய்வ அனுக்கிரகம், ஞுaல் நாவல் எழுதுதல், வேதம்ஓதுதல், அறிவுத்திறன், ஆகியவற்றை அறியலாம். உடலில் வயிற்றை குறிக்கும்.ஆறாம் பாவம்6, சத்ரு ஸ்தானம், ருணகள சத்துரு, ஸ்தானம் என அழைக்கப்படும். இதன் மூலம்சாதகருக்கு ஏற்படும் நோய், கடன், எதிரிகள், கெட்ட சம்பவங்கள், கோர்ட்,வழக்குகள், மறதி, பசி, தாகம், விபத்து, சிறைபடுதல், கிரிமினல் விவகாரம், திருடுகொடுத்தல், அதிர்ச்சி தரும் சம்பவங்கள் அடிவையிற்றை குறிக்கும்.ஏழாம் பாவம், சப்தம ஸ்தானம், களத்திர ஸ்தானம் போகஸ்தானம் என அழைக்கப்படும் இதன்மூலமாக காமம், போகம், நாபிக்கு கீழ் உள்ள பகுதி, ஆண் சாதகமாயின்மனைவியைப் பற்றியும், பெண் சாதகமாயின் கணவனைப் பற்றியும், திருமணம்இல்லற வாழ்வின் ஏற்றத்தாழ்வ,< யாத்திரை, கூட்டுத்தொழில், முதலியவற்றைஅறியலாம். உடம்பில் இடைப் பகுதியை குறிக்கும்.எட்டாம் பாவம்8, அஸ்டம ஸ்தானம், அவமான ஸ்தானம், ஆயுள் ஸ்தானம், எதிர்பாரா தனலாபஸ்தானம், என்றெல்லாம் அழைக்கப்படும். இதன் மூலம் சாதகரின் ஆயுள் காலம்,அவமானங்கள், கண்டங்கள், லாட்டரி, புதையல், போன்ற எதிர்பாராமல் கிடைக்கும்தன லாபங்கள். பிறப்பு உருப்பு சம்பந்தப்பட்ட கோளாறுகள், அடிமை, மற்றும்அகதியாய் இருக்கும் நிலைமை, எய்ட்ஸ்நோய், விடி, பெண்கள் சாதகத்தில் எட்டாம்இடம் மாங்கல்யஸ்தானம் எனப்படும். விவாகாரத்து, சோம்பேறித்தனம், ஜீவன்களைசித்திரவதை செய்தல் கடனால் கவலை துர்மரணம் சிறைத்தண்டனை ஆகியவற்றைகுறிக்கும் உடல் உருப்பில் மாமஸ்தானத்தை பிறப்பு உருப்பை குறிக்கும்.ஒன்பதாம் பாவம்9, பிதுர் பாக்கிய ஸ்தானம,f பூர்வ புண்ணிய ஸ்தானம் என்றேல்லாம்அழைக்கப்படும். இதன் மூலம் தகப்பனார் நிலை, சாதகரின் யோகம், பூர்வபுண்ணியம் சொத்துக்கள், அதாவது தந்தை வழி சொத்து, வேள்வி, தேவாலையபிரதிஷ்டை, கப்பல் யாத்திரை, சாஸ்திர விவேகம், நீண்ட பிரயாணம், தீaத்த ஸ்தலயாத்திரை, குதிரை, யானை, கறவை மாடுகள், குரு கோவில், திருப்பணீ,அட்டமசித்து, ஆகியன பற்றி அறியலாம். உடல் உருப்பில் தொடைகளை குறிக்கும்.பத்தாம் பாவம்10, கர்மஸ்தானம், தொழில்ஸ்தானம், என அழைக்கப்படும். இதன் மூலம் சாதகரின்தொழில், கர்மம், அதிகாரம், யோகம், யாகம், போஜனருசி தகப்பனின் செய்பாவம்ஒழித்தல், புகழ், அதிகாரம், அரசாங்க உத்தியோகம், மந்திர உச்சாடனம், பற்றிஅறியலாம். உடம்பில் முழங்கால்களை குறிக்கும்.பதினொன்றாவது பாவம்11, லாபஸ்தானம், மூத்த சகோதர ஸ்தானம், என்று அழைக்கப்படும். இதன மூலம்தொழிலாலும், பிற வழிகளாலும் ஏற்படும் லாபங்கள். மூத்த சகோதர,சகோதரிகள், இடது காது, கணுக்கால், பொருளIட்டல், சொத்துகள் அடைதல், கடிதலாபங்கள், கடல் பிரயானம், பற்றி அறியலாம்.பனிரென்டாவது பாவம்12, விரய ஸ்தானம், அயன சயன, போக பாக்கிய ஸ்தானம், என அழைக்கப்படும்.இதன் மூலம் செலவினங்கள், நட்டங்கள், உணவு, துaக்கம், போகம், உடல் உறவு,இடது கண், மறுபிறவி, மோட்சம், தற்கொலை, ராஜ துரோகம், சாதி மாறுதல்,அந்நிய தேசவாசம், வறுமை, உடல் உருப்பில் பாதங்கள்.26
கிரஹங்களும் அதன் மரங்களும்
பெரிய மரங்கள், மருந்து செடிகள், கோதுமை, நெல், வேர்க்கடலை, தென்னை, ஜாதிக்காய், மசாலா செடிகள், ஓமம், மிளகு, பெரிய காடுகள், நெல்லி, மணிபுங்கம...
-
புஷ்கர அம்சம் கிருத்திகை, உத்திரம், உத்திராடம் (1 மற்றும் 4ஆம் பாதம்) ரோகிணி, ஹஸ்தம், திருவோணம் ( 2ஆம் பாதம்) புனர்பூசம், விசாகம், பூரட்டாத...
-
*ஜோதிடத்தில் 27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்* ஜோதிட நட்புகளுக்காக இன்றைய பதிவு திருப்பதி திருமலையில் இருந்து. யோகம் என்பது வானத்தில...
-
மன்னார்குடிஜோதிட ஆசான் தெட்சிண் பாரத் வேண்டுகோளுக்கிணங்க. முதலில் உள்ள லக்னம் புஷ்கர நவாம்ச காலில் அமர்ந்துவிட்டால் தொடர்ந்து அவர்களுக்கு யோ...
-
*தன்னை இழக்க கூடிய, (ஒழுக்கமின்றி , நெறி தவறக்கூடிய அமைப்பு, விபச்சாரம், கீழ்நிலைப் ஆண், பெண்களின் தொடர்பு.) ஆண் பெண் இருவருக்கும்,எந்த சூ...
-
செல்வங்களுக்கு அதிபதியான குபேரன் ஆதிக்கம் செலுத்துவதே வடக்கு திசை என்கிறது வாஸ்து. வடக்கு பார்த்து கட்டப்படும் வீட்டிற்கான வாஸ்து பலன் முழ...
-
சனி பகவானுக்கு உண்டான பரிகாரம். நீலாஞ்ஜன ஸமாபாஸம் ரவிபுத்ரம் யமாக்ரஜம் ச்சாயா மார்த்தாண்ட ஸம்பூதம் தம் நமாமி ஸநைஸ்சரம் || ஓம் ...
-
முதல் வீடு : இதை வைத்து ஜாதகருடைய நிறம், உருவம், உயரம், குணாதிசயங்கள் முதலியவற்றை அறியலாம். ஜாதகர் ஒல்லியானவரா, இல்லை பருமனானவரா, கோபம் உ...
-
திதியில் வழிபட வேண்டிய தெய்வங்கள் 1.ப்ரதமை: அக்னி பகவான் வழிபாடு 2.துவிதியை : அஸ்வினி தேவதைகள் வழிபாடு. 1 வருடம் செய்தால் விதியா விரதம். 3.த...
-
சனி பகவான் 12 பாவங்களில் நின்ற பலன் 1 லக்னத்தில் சனி இருந்து வீடு கட்டினால் கடன் உண்டாகும். கஷ்டங்கள் ஏற்படும். லக்னத்தில் சனி இருந்து அதற்...
-
தெற்கு நோக்கிய வீடு வாஸ்து விதிகள் தெற்கு திசை நோக்கிய வீடுகளுக்கு பொருந்தும். வீடு வாங்குவோர் மத்தியில் பொதுவாகக் காணப்படும் கருத்து என்னவெ...