இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 7 ஜூலை, 2023

குளிகன் 12 வீடுகளில் உள்ள பலன்....

 குளிகன் லக்னத்தில் இருந்தால் அந்தச் சாதகன் களவு செய்பவன், கொடிய குணமுடையவன். பணிவு இல்லாதவன் விகாரமான கண்களை உடையவன். மூடன். அதிக குழந்தை பேறு இல்லாதவன். செய்திகளை அறிவதில் விருப்பம் உடையவன். பிழைக்க வழி தெரியாதவன். எந்நேரமும் கோபம் உடையவன். கலகம் உடையவன்.


2.இரண்டில் குளிகன் சாமார்த்தியமின்மை, கலகம் செய்தல், செல்வமின்மை, அயல்நாட்டு வாசம், விவேகமின்மை


3.மூன்றில் குளிகன் அகங்காரம், கோபத்தில் ஈட்டிய பொருள், சமர்த்து, சோகமின்மை


4.குளிகன் நான்கில், உறவினர் சேர்க்கை, ஊர்தி, செல்வம்


5.குளிகன் ஐந்தில், சஞ்சலம், இழிந்த குணம், அற்பமான தொழில்


6.குளிகன் ஆறில்,பகைவர் அழிவு, சூரத்துவம், சிரேஷ்டமான பிள்ளைகள்.


7.குளிகன் ஏழில், கலகத்தில் விருப்பம், பெண் சேர்க்கை, பலருக்கும் பகை, சொற்ப செய்நன்றி, சொற்ப கோபம்.


8.குளிகன் எட்டில், கண்ணும், முகமும் விகாரம், குள்ள வடிவு


9.குளிகன் ஒன்பதில், ஆசாரியன், குழந்தை பேறு இன்மை


10.குளிகன் பத்தில் நன்மை தரும். புண்ணிய செயல்களைச் செய்யாமை, மானமின்மை


11.குளிகன் 11ல்,நல்ல பிள்ளைகள், சிறந்த புகழ், ஒளி உடைய உடல்.


12.குளிகன் 12ல்,செய்திகளில் விருப்பமின்மை, செலவாளி.


[ குளிகன் இருக்கும் இராசிக்குத் திரிகோண இராசியில் அல்லது அது இருக்கும் அம்சத்தில் மக்கள் பிறப்பர்]

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கிரஹங்களும் அதன் மரங்களும்

  பெரிய மரங்கள், மருந்து செடிகள், கோதுமை, நெல், வேர்க்கடலை, தென்னை, ஜாதிக்காய், மசாலா செடிகள், ஓமம், மிளகு, பெரிய காடுகள், நெல்லி, மணிபுங்கம...