சனி பகவான் 12 பாவங்களில் நின்ற பலன்
1 லக்னத்தில் சனி இருந்து வீடு கட்டினால் கடன் உண்டாகும். கஷ்டங்கள் ஏற்படும். லக்னத்தில் சனி இருந்து அதற்கு கேந்திரத்தில் பகை கிரஹம் இல்லாமல் இருந்தால் மிகுந்த செல்வ சேர்க்கை உண்டாகும். செல்வம், புகழ், அதிகாரம் உண்டாகும்.
2 லக்னத்திற்கு 2ல் சனி பகவான் இருந்தால் மாமனார் குடும்பத்தில் அகால மரணமும், செல்வம் இழக்கும் நிலையும் ஏற்படும். மாமனார் குடும்பம் அழிந்து போகும்.
3 லக்னத்திற்கு 3ல் சனி பகவான் இருந்தால் நிலையான சொத்துகள் அதிகமாக இருக்கும்.
பணம் குறைவாக இருக்கும்.
4.லக்னத்திற்கு 4ல் சனி பகவான் இருந்தால் தாய் மற்றும் தாய்மாமனுக்கு பாதிப்பு ஏற்படும்
5.லக்னத்திற்கு5ல் சனி பகவான் இருந்தால் [ இரும்பு துரு பிடிப்பது போல்] உடல் உபாதைகள் ஏற்படும். குழந்தையின்மை ஏற்படும். Facebook, WhatsApp, Instagram இல் வாழ்க்கையை தொலைத்து விடுவார்கள்.48 வயதுக்கு முன் வீடு கட்ட கூடாது. கட்டினால் குழந்தைகள் பாதிப்பு அடைவார்கள்.
6.லக்னத்திற்கு 6 ல் சனி பகவான் இருந்தால்,
தாய்மாமன் மற்றும் மாமனார் வீட்டில் கஷ்டங்கள் ஏற்படும்.
7.லக்னத்திற்கு 7 ல் சனி பகவான் இருந்து ,வீடு கட்டினால் சாதகருக்கு நல்ல தொழில் விருத்தி உண்டாகும்.
8.லக்னத்திற்கு 8ல் சனி பகவான் இருந்தால் அகால மரணம் உண்டாகும். சத்ரு கிரஹம் எதிரில் இருந்தால் தொடர் மரணம் உண்டாகும்.
9.லக்னத்திற்கு 9ல் சனி பகவான் இருந்தால்,சிலை வழிபாடு விரும்ப மாட்டார்கள். சகோதர வகையில் செல்வத்தை அடைவார்கள். பரந்த எண்ணம் உடையவராக இருப்பார் [ practical life]. மூட நம்பிக்கை இருக்காது. 3 வீடு கட்டியவுடன் மரணம் உண்டாகும்.
10.லக்னத்திற்கு 10ல் சனி பகவான் இருந்தால் வீடு கட்ட கூடாது. கடனாளியாக ஆகி விடுவார்கள். மனைவி நோய்வாய் படுவார்.
11.லக்னத்திற்கு 11ல் சனி பகவான் இருந்தால்,தெற்கு வாசல் வீடு கட்டினால் மிகவும் மோசமான மரணம் ஏற்படும்.
12.லக்னத்திற்கு 12ல் சனி பகவான் இருந்தால்,சாதகருக்கு தானாகவே கட்டிய வீடு அமையும். [ குரங்கு வீடு கட்டுவதில்லை. அதற்கு இயற்கையாகவே வீடு அமைந்து விடுகிறது]. பாம்பு இவர்களுக்கு காவலாக இருக்கும் சனி 12ல் இருந்தால் மிகுந்த நற்பலன் உண்டாகும். வாழ்க்கையில் எந்த ப்ரச்சனையும் உண்டாகாது.
ஜோதிட ஆலோசனைக்கு அஷ்வாரூட வாராஹி ஜோதிட நிலையம்
கோல்டன் சிட்டி பெரம்பலூர்
ஜோதிடர் சுரேஷ் 9585293911,9087848876
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக