இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 6 ஜூலை, 2023

ஆண் பெண் திருமணம் முன்பே கற்பு இழக்கும் நிலை

 *தன்னை இழக்க கூடிய, (ஒழுக்கமின்றி , நெறி தவறக்கூடிய அமைப்பு, விபச்சாரம், கீழ்நிலைப் ஆண், பெண்களின் தொடர்பு.)

 ஆண் பெண் இருவருக்கும்,எந்த சூழ்நிலையில், எந்த மாதிரியான கிரக அமைப்பு  இருக்கும் பொழுது அமையும்?*


 காமம் என்பது ,அனைத்து உயிர்களுக்குள்ளும் இருந்தாலும், மனிதனுக்கு பதின் பருவ வயது எனப்படும், 15 ,16 வயதில்  ஆண் பெண்  இருவருக்கும், முழுமையான அமைப்பில், காம எண்ணங்கள் தோன்ற ஆரம்பிக்கின்றன.


 திருமண வயது வரை காத்திருந்து , திருமணத்திற்கு பிறகு, தன் வாழ்க்கை துணையுடன் மட்டுமே, முழுமையான அமைப்பில், தாம்பத்திய  உறவை ஏற்படுத்திக் கொள்வதையே நம் இந்து மதம் போதிக்கிறது.


 மொபைல், இன்டர்நெட் உதவியால், இன்று 8 வயது சிறுவனுக்கே "A to z" தெரிகிறது.


 கள்ளக்காதல் பெருக, மொபைலும் ஒரு காரணம் என்றால் அது மிகையல்ல.


 நேற்று ஒரு பத்திரிக்கை செய்தி , பாலியல் உறவை, 18 வயதில் இருந்து ,16 வயதாக மாற்றுவதற்கு  ஆலோசனை நடப்பதாக செய்தி.😝


 தனக்கு பிடித்த நபருடன் "உறவு" வைத்துக் கொள்வதை  நீதிமன்றமும் குற்றமில்லை என்று அறிவித்து விட்டது.


 சரி ,அது ஒருபுறம் இருக்கட்டும்.


 *தன்னை முழுமையாக இழக்க கூடிய ஜாதக அமைப்பு , ஜாதகத்தில்  ஆண் பெண் இருவருக்கும் , எந்த நிலையில் இருக்கும்?*


1. லக்னம் என்பது நீங்கள். லக்னம், லக்னாதிபதி  நிச்சயமாக நீச அமைப்பில் இருக்கும்.( நீசம் என்ற தூய தமிழுக்கு தமிழில் கெட்டுப் போதல் என்று அர்த்தம்.)  அல்லது பாவ அமைப்பில் மிகக் கடுமையாக கெட்டிருக்கும்.


2. பாலியல் உறவை குறிக்கக்கூடிய சுக்கிரன் ஜாதகத்தில் கெட்டு,(சில நிலைகளில் வலுத்து)  சில நிலைகளில் வலுத்து என்பதற்கான விளக்கத்தை அடுத்துச் சொல்கிறேன்.

 சுக்கிரனுடைய தசா புத்தி அந்தரம் , கண்டிப்பாக நடப்பில் இருக்கும்.


( சுக்கிரன் வலுத்திருக்கும் பொழுது , பெண்கள், சுகத்திற்காக ஆண் விபச்சாரர்களை (Giglose ) விரும்பும் அமைப்பு)


3. சனி கீழ்நிலை அமைப்பில்  உள்ளவர்களை குறிக்கும். கீழ்த்தரமான  செய்கைகளையும் (விபசாரம்) குறிக்கும்.


 4. எந்த ஒரு பலனும் தசா புத்தியின் அடிப்படையில் தான் என்பதால்,

நீச நட்சத்திர சாரத்தில் உள்ள கிரகத்தின் திசை நடக்கும் பொழுது,  ஜாதகத்தில் லக்னாதிபதியும் வலுவிழந்த நிலையில் இருக்கும் பொழுது, சனி சம்பந்தப்பட  தன்னை இழக்கக்கூடிய அபாயம் உண்டு.


5. சுக்கிரன்,  நீச சனி தொடர்புபோ, இணைவோ பெற்றால், நிச்சயமாக கீழ்நிலை தொடர்பு ஏற்படும்.


6. லக்னாதிபதி நீசமாகி, மனதைக் குறிக்கக்கூடிய சந்திரனும், புத்திஸ்தானதிபதியும் கெட்டு, சனியின் தொடர்பை பெற்ற சுக்கிர திசை நடக்குமானால், ஒருவர் நீடித்த அமைப்பில் விபச்சாரம் செய்யக்கூடிய  அமைப்பைக் கொடுத்து, தன்னை  அடிக்கடி  இழக்கும் அமைப்பைக் கொடுக்கும்.


7. 4ம் இடம் எனப்படும் கற்பு ஸ்தானத்துக்குடைய கிரகம் கெட்டிருக்கும் அல்லது இதோடு  கண்டிப்பாக தொடர்பு பெற்றிருக்கும்.


 8.சில நிலைகளில் கோச்சாரத்தில் எழரை சனி, அஷ்டம சனியில்,  சுக்கிரன் தசா புத்திகள் நடக்கும் பட்சத்தில், லக்னாதிபதி வலுவிழந்த நிலையில் இருந்தால் , தன்னுடைய கற்புக்கு உத்திரவாதம் இல்லை. (சில ஜாதகங்களில் கோச்சாரத்தில்  அஷ்டம சனி, ஜென்ம சனி நடந்த காலகட்டங்களில் வழித்தவறிய, சிலருடைய ஜாதகங்களை பார்த்ததுண்டு)


 ஒருவர் வழி தவறும் பட்சத்தில், அவருடைய ஜாதகத்தில், மேற்கண்ட அமைப்புகள் நிச்சயமாக இருந்தே தீரும் .


இதைப்பற்றி ஒரு உதாரண ஜாதகத்தோடு அடுத்த பதிவில் பதிகிறேன்.

நன்றி வெள்ளிங்கிரி ஐயா..

ஓம் நமசிவாய

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கிரஹங்களும் அதன் மரங்களும்

  பெரிய மரங்கள், மருந்து செடிகள், கோதுமை, நெல், வேர்க்கடலை, தென்னை, ஜாதிக்காய், மசாலா செடிகள், ஓமம், மிளகு, பெரிய காடுகள், நெல்லி, மணிபுங்கம...