இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 31 ஜூலை, 2023

துலாம் ராசிக்கு பயன் தரும் வாழ்நாள் பரிகாரங்கள்..

 

ராசி மண்டலத்தில் இடம்பெற்றுள்ள ஏழாவது ராசி துலாம். துலாம் ராசியின் அதிபதி சுக்கிரன்.

துலாம் ராசிக்கு, சனியும், புதனும் நட்பு கிரகங்கள், குருவும், சூரியனும் பகை கிரகங்கள்.

ஆகவே, நட்பு கிரகங்களின் காரகத்துவம் உள்ள பொருட்கள், நிறங்கள், இடங்கள் போன்றவை நன்மை பயக்கும். பகை கிரகங்களின் காரகத்துவங்கள் நன்மை அளிக்காது.

அதன்படி, புதனுக்கு உரிய பச்சை, சனிக்கு உரிய நீல நிற ஆடைகள் மற்றும் கைக்குட்டைகளை பயன்படுத்தலாம்.

சூரியனுக்கு உரிய ஆரஞ்சு, குருவுக்கு உரிய மஞ்சள் நிற ஆடைகள் மற்றும் கைக்குட்டைகளை தவிர்க்கலாம்.

தடைகள் மற்றும் இடையூறுகள் அகல, ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறத்தில் உள்ள அரையடி நீள ரிப்பன்களை எடுத்து, ஞாயிறு அல்லது வியாழக்கிழமைகளில், கத்தரிக்கோலால் துண்டு துண்டாக வெட்டிப் போடலாம்.

அதேபோல், கோதுமை மற்றும் கொண்டைக்கடலை ஆகியவற்றை கொஞ்சம் எடுத்து, ஞாயிறு அல்லது வியாழக்கிழமைகளில் ஒரு கல்லில் வைத்து இடித்து போடலாம்.

மேலும், சூரியன் மற்றும் குரு ஆதிக்கம் நிறைந்த கோயில்களுக்கு அடிக்கடி செல்வதை தவிர்க்க வேண்டும்.

இவை அனைத்தும் அனுபவம் நிறைந்த ஜோதிடர்கள் கண்டறிந்த  எளிய பரிகார முறைகள் ஆகும்.

வடஇந்தியாவின் மிகப்பழமையான லால் கிதாப் என்ற சிவப்பு நூல் துலாம் ராசிக்கு கூறும் பரிகாரங்கள் சிலவற்றை பார்ப்போம்.

கோயில் மற்றும் அன்னதானங்களுக்கு வெண்ணெய்,  தயிர், உருளைக்கிழங்கு போன்றவற்றை இலவசமாக வழங்க வேண்டும் என்றும்  மற்றவர்களிடம் இருந்து எதையும் தானமாகப் பெறக்கூடாது என்றும் லால் கிதாப் கூறுகிறது.

வெள்ளிக்கிழமை தோறும் வீட்டில் பசுவின் கோமியம் தெளிப்பது நல்லது.

மாமியார் வீட்டில் இருந்து வெள்ளி பாத்திரம் அல்லது வெள்ளி நாணயத்தை வாங்கி வைத்துக் கொள்வது நல்லது என்றும் லால் கிதாப் கூறுகிறது.

அடுத்து,  துலாம் ராசி மற்றும் லக்னத்திற்கு, சுக்கிரனுக்கு உரிய வைரமும், புதனுக்கு உரிய மரகதமும், சனிக்கு உரிய நீலக்கல்லும் உகந்த ரத்தினங்களாகும்.

எனினும், ராசிக்கற்களை அணியும்போது, அனுபவம் நிறைந்த ஜோதிடர்களின் ஆலோசனைப்படி,  குறை இல்லாத கற்களை தேர்வு செய்து அணிய வேண்டும்.

ஒவ்வொருவருக்கும்  நடக்கும் தசா புத்திகள் மற்றும் கோச்சார கிரக நிலைகள் காரணமாக, பலன்கள் சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ இருக்கலாம்.

இருந்தாலும், மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்களை அகற்றி நேர்மறை எண்ணங்களை வளர்ப்பது அனைவருக்கும் நன்மை தரும். அதுவே, விதியை மதியால் வெல்லும் ரகசியம்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கிரஹங்களும் அதன் மரங்களும்

  பெரிய மரங்கள், மருந்து செடிகள், கோதுமை, நெல், வேர்க்கடலை, தென்னை, ஜாதிக்காய், மசாலா செடிகள், ஓமம், மிளகு, பெரிய காடுகள், நெல்லி, மணிபுங்கம...