இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 31 ஜூலை, 2023

கன்னி ராசிக்கு பயன் தரும் வாழ்நாள் பரிகாரங்கள்..

 ராசி மண்டலத்தில் இடம்பெற்றுள்ள ஆறாவது ராசி கன்னி. கன்னி ராசியின் அதிபதி புதன்.

கன்னி ராசிக்கு சுக்கிரன் மற்றும் சனி நட்பு கிரகங்கள். செவ்வாயும், குருவும் பகை கிரகங்கள்.

ஆகவே, நட்பு கிரகங்களின் காரகத்துவம் உள்ள பொருட்கள், நிறங்கள், இடங்கள் போன்றவை நன்மை பயக்கும். பகை கிரகங்களின் காரகத்துவங்கள் நன்மை அளிக்காது.

அதன்படி, சுக்கிரனுக்கு உரிய பிங்க், சனிக்கு உரிய நீலம் ஆகிய நிறங்களில் ஆடைகள் மற்றும் கைக்குட்டைகளை பயன்படுத்தலாம்.

செவ்வாய்க்கு உரிய சிவப்பு, குருவுக்கு உரிய மஞ்சள் நிறங்களை ஆடைகள் மற்றும் கைக்குட்டைகளை தவிர்க்கலாம்.

தடைகள் மற்றும் இடையூறுகள் அகல, சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் உள்ள அரையடி நீள ரிப்பன்களை எடுத்து, செவ்வாய் அல்லது வியாழக்கிழமைகளில், கத்தரிக்கோலால் துண்டு துண்டாக வெட்டிப் போடலாம்.

அதேபோல், துவரை மற்றும் கொண்டைக்கடலை ஆகியவற்றை கொஞ்சம் எடுத்து, செவ்வாய் அல்லது வியாழக்கிழமைகளில் ஒரு கல்லில் வைத்து இடித்து போடலாம்.

மேலும், செவ்வாய் மற்றும் குரு ஆதிக்கம் நிறைந்த கோயில்களுக்கு அடிக்கடி செல்வதை தவிர்க்க வேண்டும்.

இவை அனைத்தும் அனுபவம் நிறைந்த ஜோதிடர்கள் கண்டறிந்த  எளிய பரிகார முறைகள் ஆகும்.

வடஇந்தியாவின் மிகப்பழமையான லால் கிதாப் என்ற சிவப்பு நூல் கன்னி ராசிக்கு கூறும் பரிகாரங்கள் சிலவற்றை பார்ப்போம்.

மழை நீரை பிடித்து சேமித்து வைத்துக் கொள்வது நல்லது என்று லால் கிதாப் கூறுகிறது.

 வீட்டில் பூஜை அறையை அடிக்கடி மாற்ற கூடாது என்றும் புத்தாடை அணியும் போது, அதில் கொஞ்சம் நீரை தெளித்து அணிந்தால், ஆடை அணிகலன்கள் அதிகம் சேரும் என்றும் லால் கிதாப் கூறுகிறது.

அதேபோல், கன்னி ராசிக்காரர்கள் புதன் கிழமைகளில் மற்றவர்களை திட்டக்கூடாது. யாருக்கும் வாக்குறுதி அளிக்க கூடாது என்றும் லால்கிதாப் கூறுகிறது.

அடுத்து,  கன்னி ராசி மற்றும் லக்னத்திற்கு, புதனுக்கு உரிய மரகதம், சுக்கிரனுக்கு உரிய வைரமும், சனிக்கு உரிய நீலக்கல்லும் உகந்த ரத்தினங்களாகும்.

எனினும், ராசிக்கற்களை அணியும்போது, அனுபவம் நிறைந்த ஜோதிடர்களின் ஆலோசனைப்படி, குறை இல்லாத ரத்தினங்களையே அணிய வேண்டும்.

ஒவ்வொருவரின் தனிப்பட்ட ஜாதகம், நடக்கும் தசா புத்திகள், கோச்சார கிரக நிலைகளைப் பொறுத்து, அவர்களுக்கு சாதகமான பலன்களோ அல்லது பாதகமான பலன்களோ நடக்கலாம்.

இருந்தாலும், மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்களை அகற்றி நேர்மறை எண்ணங்களை வளர்ப்பது அனைவருக்கும் நன்மை தரும். அதுவே, விதியை மதியால் வெல்லும் ரகசியம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கிரஹங்களும் அதன் மரங்களும்

  பெரிய மரங்கள், மருந்து செடிகள், கோதுமை, நெல், வேர்க்கடலை, தென்னை, ஜாதிக்காய், மசாலா செடிகள், ஓமம், மிளகு, பெரிய காடுகள், நெல்லி, மணிபுங்கம...