செல்வங்களுக்கு அதிபதியான குபேரன் ஆதிக்கம் செலுத்துவதே வடக்கு திசை என்கிறது வாஸ்து. வடக்கு பார்த்து கட்டப்படும் வீட்டிற்கான வாஸ்து பலன் முழுமையாக கிட்ட வேண்டுமெனில், அந்த வீடு முழுவதும் வாஸ்து முறைப்படி கட்டபட்டு, அங்குள்ள குறைபாடுகள் முழுவதுமாக நீக்கபட வேண்டும். வாஸ்து முறைப்படி வடக்கு பார்த்து வீடு கட்டுவதற்கான வாஸ்து வழிகாட்டியை இங்கே காணலாம்.
வாஸ்து சாஸ்திரத்தின் படி, கிழக்கு, வடக்கு, வடகிழக்கு திசைகளை பார்த்தவாறு கட்டப்படும் வீடுகள் மிகவும் அதிர்ஷ்டமானவை. எனினும், நேர்மறை ஆற்றல் உருவாதற்கு இந்த ஒரு காரணி மட்டும் போதாது. வடக்கு திசை செல்வத்தின் அதிபதியான குபேரனுக்கு உகந்தது என்ற அடிப்படையில் நோக்கினால், வடக்கு பார்த்து கட்டப்படும் வீடுகள் மிகவும் பிரபலமடைந்திருக்க வேண்டும்.
உங்கள் வாழ்க்கை வளமானதாக மாற வேண்டும் என நீங்கள் விரும்பினால், வடக்கு திசை பார்த்து நீங்கள் அமைக்கும் அனைத்து கட்டடங்களுக்கும், அதற்கென உள்ள சில வாஸ்துக் குறிப்புகளை அவசியம் பின்பற்ற வேண்டும். வடக்கு பார்த்து கட்டப்படும் வீட்டில், வாஸ்து முறைப்படி வீட்டின் தலைவாசலான பிரதான கதவு வடக்கு திசையை பார்த்து அமைக்க வேண்டும். மேலும் தெற்கு, மேற்கு, தென்கிழக்கு அல்லது வடகிழக்கு திசைகளை பார்த்தபடி மாடிப்படிக்கட்டுகளை அமைத்தால் அந்த வீடு மிகவும் அதிர்ஷ்டம் வாய்ந்ததாக அமையும்.
வடக்கு பார்த்த வீட்டுக்கான வாஸ்து திட்டத்தில், பிரதான கதவு என்பது வடக்கு திசையில் இருக்குமாறு அமைக்க வேண்டும். அவ்வாறு வடக்கு திசையில் இருக்குமாறு அமைத்தாலும், அதை ஐந்தாவது அடி அல்லது பாதத்தில் அமைப்பது மிகவும் அதிர்ஷ்டமானதாகவும், மங்களாகரமானதாகவும் கருதப்படுகிறது, மேலும், அது செல்வத்தை ஈர்க்கும். ஏனெனில், வடக்கு திசையானது செல்வங்களின் அதிபதியான குபேரன் உடையது.
மேலும் 3-வது, 4-வது மற்றும் 8-வது பாதங்களாக முறையே முக்யா, பாலத், திதி ஆகிய பாதங்களும் அதிர்ஷ்டமானவையாக கருதப்படுகிறது. பிரதான கதவு வாஸ்து முறைப்படி மேற்கண்ட ஏதேனும் ஒரு பாதங்களில் பிரதான கதவை அமைப்பது செல்வத்தை தன்னகத்தே ஈர்க்கும் விதமாக அமையும்.
வடகிழக்கு மற்றும் வடமேற்கு திசைகளுக்கு இடையே உள்ள தூரத்தை ஒன்பது சம பாகங்களாகப் பிரித்தால், அதில் வரும் ஐந்தாவது பாதத்தின் மேல் அமையும் வீடானது வாஸ்து முறைப்படி மிகவும் அதிர்ஷ்டமானதாக கருதுப்படுகிறது.
வடக்கு பார்த்த வீடு நல்லதா?
ஏதோ ஒரு குறிப்பிட்ட திசை மட்டுமே நல்லது, மற்ற திசைகள் கெட்டது என்பது போன்ற கருத்து நம்மிடையே பரவலாக நிலவி வருகிறது, இது தவறானது. வாஸ்து சாஸ்திரத்தில் கூறியுள்ள படி, சில விதிகளை சரியாக கடைபிடித்தால் எல்லா திசைகளுமே நமக்கு நன்மை தருவனவாகும். உதாரணமாக, வீட்டின் பிரதான கதவை எந்த இடத்தில் அமைக்கிறோம் என்பதை முக்கியமாக கவனிக்க வேண்டும். மேலும் அந்த வீட்டில் அலங்கரிக்கபடும் ஃபர்னிச்சர்கள், அறைகளுக்காக தேர்ந்தெடுக்கப்படும் நிறங்கள் மற்றும் அவ்வீட்டின் குடும்ப உறுப்பினர்களின் ஜாதகங்கள் போன்ற காரணங்களைக் கொண்டு அந்த வீடு நல்லதா அல்லது கெட்டதா என நிர்ணயிக்கலாம்.
வாஸ்து முறைப்படி, வடக்கு பார்த்த வீட்டை வடிவமைப்பது அங்கு குடியிருப்பவர்களுக்கு அதிர்ஷ்டத்தை தரும். செல்வங்களுக்கு அதிபதியான குபேரன் திசையில் அவ்வீட்டில் அனைத்தும் அமைப்பதால் அது செல்வத்தை ஈர்க்கும் இடமாக உள்ளது. குறிப்பாக நிதித் துறையில் இருப்பவர்கள் அல்லது சொந்தமாக தொழில் செய்பவர்களுக்கு வாஸ்து முறைப்படி வடக்கு பார்த்த வீடு பல நன்மைகளை அளிக்கும். இந்த திசையானது புதன் கிரகத்துடன் தொடர்புடையது. எனவே, வங்கி மற்றும் நிதித் துறையை சேர்ந்தவர்களான வணிகர்கள், முதலீட்டாளர்கள், பங்குச் சந்தை வர்த்தகர்கள் மற்றும் தரகர்கள், வங்கியாளர்கள், கணக்காளர்கள் போன்றவர்களுக்கு வடக்கு பார்த்த வீடுகள் ஏற்றதாக இருக்கும். மேலும் அதிக பயணம் செய்பவர்கள், மருத்துவத் துறையைச் சேர்ந்தவர்கள், சுகாதாரத் துறை, பிரின்டிங் மற்றும் பப்ளிஷிங் தொழிலில் இருப்பவர்களுக்கும் வடக்கு நோக்கிய வீடு நல்ல பலன் தருவதாக அமையும்.
அதேவேளையில், ஒரு சொத்து வாங்கும்பொழுதோ அல்லது வடக்கு பார்த்த வீடு வாங்கும் பொழுதோ அல்லது வடக்கு பார்த்த வீடு கட்டும்போதோ வடக்கு பார்த்த வீட்டை கட்டுவதற்கான வாஸ்து குறிப்புகளை பின்பற்றுவது மிகவும் முக்கியமானதாகும். குறிப்பாக அவ்வீட்டில் அமைக்கபடும் அறைகள் மற்றும் அதன் எண்ணிக்கை மற்றும் கதவுகளின் அளவுகள் வாஸ்து விதிகளின்படி அமைக்கப்பட வேண்டும்.
வடக்கு பார்த்த வீடு வாஸ்து: படிக்கட்டுகள் அமைவிடம்
வாஸ்து நிபுணர்களின் உதவியுடன் வீட்டில் அறைகள் அமைப்பதிலும், பொருட்களை வைப்பதிலும் மாற்றங்கள் செய்யலாம். மேலும், இதற்கென உதவ சுருக்கமாக சிலக் குறிப்புகள் இங்கே…
- வடக்கு பார்த்த படிக்கட்டுகள் அமைக்கக் கூடாது; அது பண நெருக்கடிக்களை ஏற்படுத்தும்.
- படிக்கட்டுகளை தெற்கு, மேற்கு, தென்கிழக்கு, வடமேற்கு திசையை பார்த்தவாறு அமைக்கலாம்.
- வடகிழக்கு திசையில் மாடிப்படிக்கட்டுகளை அமைக்கக் கூடாது. ஏனெனில், அதனால் நரம்பு தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
- படிக்கட்டுகள் கடிகார திசையில் இருக்குமாறு அமைக்க வேண்டும்.
ஜோதிட ஆலோசனைக்கு அஷ்வாரூட வாராஹி வாஸ்து, ஜோதிட நிலையம்.
கோல்டன் சிட்டி. பெரம்பலூர்
ஜோதிடர் சுரேஷ் 9585293911,9087848876
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக