ராசி மண்டலத்தில் இடம்பெற்றுள்ள கடைசி ராசி மீனம். மீன ராசியின் அதிபதி குரு.
மீன ராசிக்கு சந்திரனும் செவ்வாயும் நட்பு கிரகங்கள். புதனும் சுக்கிரனும் பகை கிரகங்கள்.
ஆகவே, நட்பு கிரகங்களின் காரகத்துவம் உள்ள பொருட்கள், நிறங்கள், இடங்கள் போன்றவை நன்மை பயக்கும். பகை கிரகங்களின் காரகத்துவங்கள் நன்மை அளிக்காது.
அதன்படி, சந்திரனுக்கு உரிய வெள்ளை, செவ்வாய்க்கு உரிய சிவப்பு நிற ஆடைகள் மற்றும் கைக்குட்டைகளை பயன்படுத்துவது நல்லது.
சுக்கிரனுக்கு உரிய பிங்க், புதனுக்கு உரிய பச்சை நிறங்களை கூடுமானவரை தவிர்ப்பது நல்லது.
தடைகள் மற்றும் இடையூறுகள் அகல, பச்சை மற்றும் பிங்க் நிறத்தில் உள்ள அரையடி நீள ரிப்பன்களை எடுத்து, புதன் மற்றும் வெள்ளிக்கிழமையில் கத்தரிக்கோலால் துண்டு துண்டாக வெட்டிப் போடலாம்.
அதேபோல், பச்சை பயறு மற்றும் மொச்சையை கொஞ்சம் எடுத்து, புதன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் ஒரு கல்லில் வைத்து இடித்து போடலாம்.
மேலும், புதன் மற்றும் சுக்கிரன் ஆதிக்கம் நிறைந்த கோயில்களுக்கு அடிக்கடி செல்வதை தவிர்க்க வேண்டும்.
இவை அனைத்தும் அனுபவம் நிறைந்த ஜோதிடர்கள் கண்டறிந்த எளிய பரிகார முறைகள் ஆகும்.
வடஇந்தியாவின் மிகப்பழமையான லால் கிதாப் என்ற சிவப்பு நூல் மீன ராசிக்கு கூறும் பரிகாரங்கள் சிலவற்றை பார்ப்போம்.
கையில் அல்லது சட்டைப்பையில் சிவப்பு நிற சுவஸ்திக் படம் வைத்து கொள்வது நல்லது.
எக்காரணம் கொண்டும் வீட்டில் துளசிச்செடி வளர்க்க கூடாது. அது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். துளசிச்செடி புதனின் காரகத்துவம் என்பதால் அவ்வாறு கூறப்பட்டிருக்கலாம்.
அதேபோல், வீட்டின் முன்புறம் கழிவுநீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மீனம் சுனை நீரை குறிக்கும், குரு தூய்மையை குறிக்கும் என்பதால் அவ்வாறு சொல்லப்பட்டிருக்கலாம்.
ஒரு மஞ்சள் துணியில் தங்க நாணயத்தை முடிந்து, அதை பீரோ அல்லது பணப்பெட்டியில் வைத்துக் கொள்ள செல்வம் பெருகும்.
கைக்கடிகாரத்தை வலது கையில் அணிவது நல்லது. கோழி குஞ்சுகளுக்கு இரை போடுதல் நன்மை பயக்கும்.
அடுத்து மீன ராசி மற்றும் லக்னத்திற்கு, குருவுக்கு உரிய கனக புஷ்பராகம், செவ்வாய்க்கு உரிய பவழம், சந்திரனுக்கு உரிய முத்து ஆகியவை உகந்த ரத்தினங்கள் ஆகும்.
ராசிக்கற்களை அணியும்போது, அனுபவம் நிறைந்த ஜோதிடர்களின் ஆலோசனைப்படி, குறை இல்லாத கற்களை தேர்வு செய்து அணிய வேண்டும்.
அவரவருக்கு நடக்கும் தசா புத்திகள் மற்றும் கோச்சார கிரக நிலைகள் காரணமாக, பலன்கள் சாதகமாகவே அல்லது பாதகமாகவோ இருக்கலாம்.
இருந்தாலும், மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்களை அகற்றி நேர்மறை எண்ணங்களை வளர்ப்பது அனைவருக்கும் நன்மை தரும். அதுவே, விதியை மதியால் வெல்லும் ரகசியம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக