இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 31 ஜூலை, 2023

கும்ப ராசிக்கு பயன் தரும் வாழ்நாள் பரிகாரங்கள்..

 ராசி மண்டலத்தில் இடம்பெற்றுள்ள பதினோராவது ராசி கும்பம். கும்ப ராசியின் அதிபதி சனி பகவான்.

கும்ப ராசிக்கு, இரண்டுக்கும் பதினொன்றுக்கும் உரிய குருவே முழுமையான நட்பு கிரகம். மூன்றுக்கும் பத்துக்கும் உரிய செவ்வாய் ஓரளவு நல்ல பலனை தரக்கூடிய கிரகம் ஆகும்.

கும்பத்திற்கு சுக்கிரன் பாதகாதிபதியாகவும், புதன் எட்டாம் அதிபதியாகவும் இருப்பதால் பெரிய அளவில் பலன் தருவதில்லை.

ஆகவே, நட்பு கிரகங்களின் காரகத்துவம் உள்ள பொருட்கள், நிறங்கள், இடங்கள் போன்றவை நன்மை பயக்கும். பகை கிரகங்களின் காரகத்துவங்கள் நன்மை அளிக்காது.

அதன்படி, குருவுக்கு உரிய மஞ்சள் நிற ஆடைகள் மற்றும்  கைக்குட்டைகளை பயன்படுத்துவது நல்லது.

சுக்கிரனுக்கு உரிய பிங்க், புதனுக்கு உரிய பச்சை நிறங்களை கூடுமானவரை தவிர்ப்பது நல்லது.

தடைகள் மற்றும் இடையூறுகள் அகல, பிங்க் நிறத்தில் உள்ள அரையடி நீள ரிப்பனை எடுத்து, வெள்ளிக்கிழமையில்  கத்தரிக்கோலால் துண்டு துண்டாக வெட்டிப் போடலாம்.

அதேபோல், மொச்சையை கொஞ்சம் எடுத்து, வெள்ளிக் கிழமைகளில் ஒரு கல்லில் வைத்து இடித்து போடலாம்.

மேலும், சுக்கிரன் ஆதிக்கம் நிறைந்த கோயில்களுக்கு அடிக்கடி செல்வதை தவிர்க்க வேண்டும்.

இவை அனைத்தும் அனுபவம் நிறைந்த ஜோதிடர்கள் கண்டறிந்த  எளிய பரிகார முறைகள் ஆகும்.

வடஇந்தியாவின் மிகப்பழமையான லால் கிதாப் என்ற சிவப்பு நூல் தனுசு ராசிக்கு கூறும் பரிகாரங்கள் சிலவற்றை பார்ப்போம்.

கையிலோ அல்லது கழுத்திலோ முடிந்தவரை கொஞ்சம் தங்கம் அணிவது நல்லது.

குங்குமப்பூவை அரைத்து குழைத்து, நெற்றியில் திலகமிட செல்வ வளம் பெருகும்.

சதுர வடிவிலான வெள்ளி டாலரை நூல் அல்லது செயினில் கோர்த்து கழுத்தில் அணிந்தால், தொழில் மற்றும் பணிகளில் உயர்ந்த நிலை அமையும்.

ஏழைகள் மற்றும் கோவில்களுக்கு எண்ணெய் தானம் செய்தல் நல்லது.

அடுத்து கும்ப ராசி மற்றும் லக்னத்திற்கு, சனிக்குரிய நீலக்கல், குருவுக்குரிய கனக புஷ்பராகம் ஆகியவை உகந்த ரத்தினங்கள் ஆகும்.

ராசிக்கற்களை அணியும்போது, அனுபவம் நிறைந்த ஜோதிடர்களின் ஆலோசனைப்படி, குறை இல்லாத ரத்தினங்களை தேர்வு செய்து  அணிய வேண்டும்.

அவரவருக்கு நடக்கும் தசா புத்திகள் மற்றும் கோச்சார கிரக நிலைகள் காரணமாக, பலன்கள் சாதகமாகவே அல்லது பாதகமாகவோ இருக்கலாம்.

இருந்தாலும், மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்களை அகற்றி நேர்மறை எண்ணங்களை வளர்ப்பது அனைவருக்கும் நன்மை தரும். அதுவே, விதியை மதியால் வெல்லும் ரகசியம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கிரஹங்களும் அதன் மரங்களும்

  பெரிய மரங்கள், மருந்து செடிகள், கோதுமை, நெல், வேர்க்கடலை, தென்னை, ஜாதிக்காய், மசாலா செடிகள், ஓமம், மிளகு, பெரிய காடுகள், நெல்லி, மணிபுங்கம...