மன்னார்குடிஜோதிட ஆசான் தெட்சிண் பாரத் வேண்டுகோளுக்கிணங்க.
முதலில் உள்ள லக்னம் புஷ்கர
நவாம்ச காலில் அமர்ந்துவிட்டால் தொடர்ந்து அவர்களுக்கு யோகம் அமைந்து கொண்டு
இருக்கும். லக்னாதிபதி லக்கினத்தில் ஆட்சி பெற்ற இருந்து புஷ்கர நவாம்சம் பெற்று மற்ற யோகங்கள் இருந்தால் உலகப்புகழ் பெறும் அமைப்பு அந்த ஜாதகருக்கு உண்டு.
ஒருவருடைய ஜாதகத்தில் இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட கிரகங்கள் புஷ்கராம்சத்தில் நின்றால் அந்த ஜாதகர் மதிக்க தக்கவராகவும், அதிர்ஷ்டம் உடையவராகவும் இருப்பார். அவர் கடவுளின் அருள் பெற்ற ஜாதகராக திகழ்வார். இவற்றைப் பற்றி பலர் பல்வேறு நூல்களில் எழுதப்பட்டுள்ளது.
இந்திய
ஜோதிடர்களால் துல்லியமாகப் பார்க்கப்படும் ராசி, நவாம்ச சக்கரம், வர்க்க கட்டங்கள், அஷ்டவர்க்கம், புஷ்கராம்சம் போன்றவை உறுதியான
பலனைக் கொடுக்கும்.
ஒருவருடைய
ஜாதகத்தில் கிரகங்கள் நீச்சம் பகை மற்றும் வலுவற்று இருந்தாலும், அந்த கிரகம் புஷ்கார நட்சத்திர
காலில் இருந்தால் அது நல்ல நிலையைக் கொடுக்கும் என்பது ஒரு விதி.
புஷ்கர
நவாம்சத்தில் உள்ள கிரகங்கள் ஆட்சி, உச்சம், நட்பு பெற்று கேந்திர மற்றும்
திரிகோணங்களில் இருந்தால் ஜாதகருக்கு இன்னும் அதீத யோக பலன்களைத் தர வல்லது.
புஷ்கர
நவாம்சத்தில் உள்ள கிரகங்கள் ராசியில் இருக்கும் இடத்திலிருந்து நவாம்சத்தில்
மறைவு (6,8,12) பெற்று இருந்தால் புகழைத் தந்தாலும் தீமையைத் தரும் ஜோதிட வல்லுநர்
CS பட்டேல் குறிப்பிட்டுள்ளார்.
யோகாதிபதிகள்
இந்த புஷ்கராம்சத்தில் இருந்தால் மாபெரும் யோகத்தைத் தனது திசாபுக்திகளில் அளித்து
உறுதியாகப் பெரிய பதவி, செல்வம், மகிழ்ச்சியை நிச்சயமாகத்
தருவார்கள்.
ஒவ்வொரு
புஷ்கராம்ச பாதமும் பயன்மிக்க கிரகங்கள் அமர்ந்து அதன் பலத்தைக் கூட்டும் இவற்றில்
மூன்று புஷ்கர நவாம்சம் வர்கோத்தமம் அடையும் அதுவும் மிகச்சிறந்த வலுவினை கொடுக்க
வல்லது.
தசை
புத்தி காலங்களில் புஷ்கராம்ச சுபக் கிரகங்கள் அதிக பலனை அள்ளித்தரும் நேரம்.
கோசார காலங்களில் சுபக் கிரகங்கள் புஷ்கராம்ச நட்சத்திர பாதத்தில் செல்லும்பொழுது
அதிக நன்மை தரும்.
உதாரணமாக குருவின் நட்சத்திரமான இரண்டாம் பாதம் நான்காம் பாதத்தில் ஒரு கிரகம் உட்கார்ந்து அந்த திசை நடக்கும் போது மிக பெரிய உயரத்திற்கு செல்வார்கள்.
விதி
முதல் 2 3 புக்தியில் வீழ்ச்சி இருக்கும் அதன் பிறகு… சிறப்பாக இருக்கும்.
6 8 12 ல் இருந்தால் 50 % + 50% -
நன்றி ..
ஜோதிட ஆலோசனைக்கு அஷ்வாரூட வாராஹி ஜோதிட நிலையம்
கோல்டன் சிட்டி பெரம்பலூர்
ஜோதிடர் சுரேஷ் 9585293911,9087848876
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக