12 பாவங்களில் சூரியன் நின்ற பலன்கள்.
*லக்னத்தில் இராகு இருந்து சூரியன் எங்கிருந்தாலும் கெடு பலன் உண்டாகும்
*சூரியன் கெட்டிருந்தால் ஜாதகர் எச்சில் துப்புவராக இருப்பார் [ புகையிலை, குட்கா]
சூரியனும், கேதுவும் ஜாதகத்தில் கெட்டு இருந்தால் உடல் உறுப்புகள் பாதிப்பு ஏற்படும். அங்கஹீனம் ஏற்படும்.
1.லக்னம் :- லக்னத்தில் சூரியன் இருந்தால் travelling, energetic, ஆன்ம பலம் உள்ளவராக இருப்பார். சமூக சேவை, ஏழை எளிய மக்களுக்கு தானம் செய்வார்கள். அண்ணண், அக்கா குறைவாக இருப்பார்கள். கோப குணம் உடையவர்கள். 5ஆம் பாவத்தில் ஆண் கிரஹம் இருந்தால் முதல் குழந்தை ஆணாக பிறக்கும்.அதுவும் பகலில் பிறக்கும்.
2.லக்னத்திற்கு இரண்டில் சூரியன் இருந்தால் நல்ல தொழிற்கல்வி, கை வேலைப்பாடு, கைத்திறமை உடையவராக இருப்பார். Craftsman. மனைவி குடும்பத்தாருடன் சண்டை சச்சரவு கூடாது. கண் சம்பந்தப்பட்ட ப்ரச்சனை இருக்கும்.
3.மூன்றில் சூரியன் இருந்தால் ஜாதகர் மிகவும் அழகாக இருப்பார். பெரிய மனிதர்களுடன் தொடர்பு. சொந்த உழைப்பில் முன்னேறுபவர்களாக இருப்பார்கள். சொல்வதை செய்து காட்டுவார்கள். 3ல் சூரியன் இருந்து லக்னத்தில் பாவிகள் இருந்தால் பக்கத்து வீட்டுக்காரர் பாதிப்புக்கு உள்ளாவார். 3 ஆண் குழந்தை, இவருக்கு பிறகு இவரது வம்சத்தில் உண்டாகும்.
4.நான்கில் சூரியன் ஜாதகர் கஞ்சனாக இருப்பார். குழந்தைகளுக்கு செல்வத்தை விட்டு செல்வர். [ save money for children].
சந்திரன் ஜாதகத்தில் கெட்டு இருந்தால் இரண்டு தாய் ஏற்படும்
5.ஐந்தில் சூரியன் இருந்தால் குழந்தைகள் வாழ்க்கையில் முன்னேறுவார்கள்.செல்வம் உண்டாகும்.குடும்பத்திற்கு பாதுகாவலனாக இருப்பார். குடும்ப முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருப்பார். புத்திசாலி ஆக இருப்பார். நிலம் மற்றும் நெருப்பு ராசியில் இருந்தால் வயிறு சம்பந்தமான பாதிப்புகள் ஏற்படும். [ Irritable bowl syndrome, constipation.]
6. சூரியன் ஆறில் இருந்தால் மிகவும் கோப குணம் உடையவராக இருப்பர். சண்டை போடாமல் தூக்கம் வராது. தினமும் சண்டை ஏற்படும். அரசியல் மற்றும் அரசாங்கத்தில் மிகுந்த செல்வாக்கு உண்டாகும். அப்பாவும் பிள்ளையும் அரசு வேலையில் இருந்தால் ஒன்றாக இருக்க மாட்டார்கள். இவர்களுக்கு மனைவி அழகாக அமைவார்கள். ஆனால் மனைவியை கண்டு கொள்ள மாட்டார்கள்.
7.ஏழில் சூரியன் இருந்தால் கெடு பலன் உண்டாகும். சிம்மத்தில் தீய கிரஹம் இருந்தால் மனைவி தன்னுடைய தாய் வீட்டை எண்ணி கஷ்டபடுவார். மாமனார் வீட்டில் நஷ்டம் ஏற்படும். இவர், மனைவியின் தங்கைக்கு செலவு செய்ய நேரிடும். [ கல்யாண செலவு]. மனைவியின் உடல் நலம் பாதிக்கும். திருமண வாழ்க்கை பாதிக்கும் [ சூரியன் + சுக்ரன்]
8. சூரியன் 8ல் இருந்தால் யாராவது இறக்கும் தருவாயில் இருந்தால், இவர் அங்கு சென்றால் மரணம் ஏற்படாது. 8 என்பது ஆயுள் ஸ்தானம். அங்கு ஒளி பொருந்திய சூரியன், இருண்ட நிலையில் ஒளி கொடுக்கும்.
9. ஒன்பதில் சூரியன் இருந்தால் குடும்பத்தை நன்கு போஷிப்பவராக இருப்பார். தான தருமம் செய்வார். சொந்தங்களை மதிப்பார். வெகுளியாக இருப்பார்.
10.பத்தில் சூரியன் புகழ், செல்வம், செல்வாக்கு, கீர்த்தி உண்டாகும். ஆனால் சந்தேக குணம் உடையவராக இருப்பார். அஹங்காரம் உடையவராக இருப்பார். மிகப்பெரிய தொழில் உடையவராக இருப்பார். யாரையும் மன்னிக்க மாட்டார் [ தாய், தந்தையாக இருந்தாலும்]. அரசியல், அரசாங்க தொடர்பு உண்டாகும். சனி பலம் குறைந்து காணப்பட்டால் தந்தைக்கு அற்ப ஆயுள் உண்டாகும்.
1 1.சூரியன் 11 ல் சுயநலவாதியாக இருப்பார். பெயர், புகழ், செல்வாக்கு உண்டாகும். தன்னுடைய வசதி, வாய்ப்புகளை பெருக்கி கொள்பவராக இருப்பார். அசைவ உணவுகளை அதிகமாக சாப்பிடுவார். அதனால் உடல் நலம் பாதிக்கும்.
12.சூரியன் இருந்தால் நன்றாக தூங்குபவராக இருப்பார். பக்கத்து வீட்டு ப்ரச்சனையை தன் தலையில் சுமப்பார். சூரியனுக்கு 12ல் பாவ கிரஹம் இருந்தால் தூக்கம் கெடும். தலையில் ப்ரச்சனை உண்டாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக