தர்மகர்மாதிபதி யோகம்
9,10 ஆம் அதிபதிகள் இணைந்து எங்கிருந்தாலும், அல்லது ஒருவர் வீட்டில் ஒருவர் மாறியிருந்தாலும், அச்சாதகன் குறைவில்லாத நல்ல வழியில் ஈட்டிய செல்வத்தை பெற்று இராச யோகத்தோடு இருப்பான்.
இக்கோள் ஆட்சி, உச்சம் பெற்றால் அரசாளும் யோகம் பெறுவர்.
கேந்திரங்களுள் 10ஆவதும், கோணங்களுள் 9ஆவதும் வலிமையானவர். எனவே இவற்றின் தொடர்பு சிறப்பு இராஜ யோக அமைப்பாகும்.
9,10ஆம் அதிபதிகள் பார்வை, சேர்க்கை, பரிவர்த்தனை பெற்று இருப்பினும், தீய கோள்களின் தொடர்பு, பார்வை போன்றவை இருப்பினும், இந்த 9,10 க்குடையவை சோர்வடையாமல் நற்பலனையே கொடுக்கின்றன என்று தாண்டவமாலை கூறுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக