செவ்வாயைப் பற்றி சில பல தகவல்களை காண்போம்...
பரத்வாஜ் முனிவருக்கும், தேவலோக கன்னிக்கும் பிறந்தவர் #செவ்வாய். இவரை ஈன்றவர்கள் பூமியில் விட்டமையால் செவ்வாயை பூமாதேவி வளர்த்ததால் #பூமிக்காரகர் என்று அழைக்கப்படுகிறார்.
செவ்வாய்க்கு அதிபதியான முருகப்பெருமான் சிவனின் நெற்றிக்கண்ணில் ஒளிப்பிலம்பாக தோன்றியதால் முருகனும் #மங்கள_நாதன் ஆவார்.
மனிதனின் கட்டுமஸ்தான உடல் அமைப்பிற்கும், மன உறுதிக்கும், உடலில் உள்ள குருதிக்கும், எலும்பில் உள்ள மஞ்சைக்கும் செவ்வாயே காரகர் ஆவார்.
முதல் வரிசையில் அமரும் அரசியல் தலைவர்களுக்கும், காவலர் மற்றும் ராணுவ வீரர்களுக்கும், நீதிபதிகள், பொறியியல் வல்லுநர்கள், மருத்துவர் மற்றும் செவிலியர்கள் இவர்களுக்கு செவ்வாயே காரகர் ஆவார்.
நமது ரத்த சொந்தமான உடன்பிறப்பிற்கும் செவ்வாயே சொந்தக்காரர்.
ஆணிற்கு செவ்வாய் பலம் பெற்றிருந்தால் வீரத்திற்கும் தைரியத்திற்கும் முன் உதாரணமாக இருப்பார். பல சாகச காரியங்களை செய்யத் துணிவார். மற்றவர்களை விட தனித்துவமாக வெளிப்படுவார்.
செவ்வாய் பலம் குறைந்து இருந்தால் கோழைத்தனம், ஒரு விஷயத்தை கேட்பதற்கு கூட தயக்கம் தரும். அடுத்தவர்கள் கேலி செய்யும் அளவிற்கு நடந்து கொள்வார்.
அதேபோல பெண்களுக்கு செவ்வாயே கணவர் ஸ்தானத்திற்கு அதிபதி. பெண்களின் பருவ மாற்றத்திற்கு காரகர் செவ்வாயே. கோச்சாரத்தில் வரும் சந்திரன் ஜெனன செவ்வாயை தொடும்போது பருவம் அடையும் நிகழ்வு ஏற்படும்.
அதே பெண்களுக்கு செவ்வாய் வலு குறைந்தால் கணவருக்கும், மாதவிடாய் காலங்களில் பிரச்சினைகளை தரும்.
ஒருவர் ஜாதகத்தில் செவ்வாய் வலுவாக இருந்தால் தனது முன் கோபத்தாலும், தனது புரிதல் இல்லாத செயலாலும் பிரச்சனைகளை சந்திக்க கூடிய நபர்களாக இருப்பார்கள். ஒரு செயல் செய்வதற்கு முன்பு யோசனை செய்யாமல் அதனை செய்து கஷ்டப்பட்டால் அவருக்கு செவ்வாய் பல பெற்றிருப்பதை காரணமாகும்.
அதேபோல 2,4,7,8,12 ல் செவ்வாய் இருந்தால் இவை செவ்வாய் தோஷமாக கருதப்படுகிறது. தோஷத்திற்கு நிறைய விதிவிலக்குகள் உண்டு.
ஒருவருக்கு தோஷமாக இருந்தால் ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் கவுண்டிங் குறைவாக இருக்கும். பெண்களுக்கு இருந்தால் மாதவிடாயில் பிரச்சனையை ஏற்படும், உதிர போக்குகள் அதிகம் ஏற்படும்.
செவ்வாய் தோஷம் என்பது வீரியத்தை குறைத்து தரும். வேற எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாது. செவ்வாய் தோஷம் பெற்றால் உடல் வலிமையை தான் பதிப்பார்.
ஒரு ஜாதகத்தில் செவ்வாய் நீசம் பெற்றிருந்தால் அல்லது அஸ்தங்கம் அடைந்தாலோ, வக்கிரம் பெற்றாலோ, ஜாதகரை மருத்துவத்துறையில் வலம் வரக்கூடிய வாய்ப்பு ஏற்படுத்துவார்.
அதேபோல ஜாதகருக்கு உச்சம் பெற்றிருக்க அல்லது கேந்திரத்தில் அமர்ந்திருந்தால் அதிகார அந்தஸ்து தோரணையில் வாழ வைத்து தீர்வார். நிச்சயமாக!
அதேபோல ஒருவர் செவ்வாய் திசையில் கெடுபலன்களை அனுபவிக்கும் நபர்கள் மலை மேல் உள்ள முருகப்பெருமானை விரதம் இருந்து வழிபாடு செய்வது செவ்வாய் திசையின் கெடு பலன்கள் குறையும்.
குலதெய்வ கோயில்களில் வேண்டுதல் வைத்திருந்தால் அதனை நிறைவேற்றுவது செவ்வாய் திசையில் ஏற்படும் கெடுபலன்கள் குறையும்.
மண்வளங்களை வளப்படுத்தி மரங்களை நட்டு அதனை பராமரிப்பது மூலம் செவ்வாயின் கெடு பலன்களை தவிர்த்துக் கொள்ளலாம்.
தீராத நோயால் அவதிப்படும் அன்பர்களுக்கு மருத்துவ உதவிகள் செய்வதன் மூலம் செவ்வாயின் கெடு பலன்களை தவிர்த்துக் கொள்ளலாம்.
ஆகையால் நான் சில அனுபவத்தில் கண்ட செவ்வாயின் காரகங்களையும், தன்மைகளையும் பதிவாக பகிர்ந்து உள்ளேன். இதைப் போன்று ஒவ்வொரு கிரகங்களின் தகவல்களையும் ஒவ்வொன்றாக பதிவிடுகிறேன்
நன்றி!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக