இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 7 ஜூலை, 2023

திதியில் வழிபட வேண்டிய தெய்வங்கள்

திதியில் வழிபட வேண்டிய தெய்வங்கள்


1.ப்ரதமை: அக்னி பகவான் வழிபாடு

2.துவிதியை : அஸ்வினி தேவதைகள் வழிபாடு. 1 வருடம் செய்தால் விதியா விரதம்.

3.திருதியை : கெளரி திருமணம் நடந்தது. கெளரி தேவியை வழிபட வேண்டும். கெளரி கல்யாணம் செய்தால் திருமணம் விரைவில் நடக்கும்.

4.சதுர்த்தி : இது விநாயக பெருமானின் பிறந்த திதி.விநாயக பெருமானை வழிபட வேண்டும். 

5.பஞ்சமி : நாகர்கள் பிறந்த நாள் பஞ்சமி. இந்த நாளில் நாக தேவதைகளுக்கும், பாம்புகளுக்கும் பால் ஊற்றி வழிபட வேண்டும் 

6.சஷ்டி : இது சுப்ரமணிய பகவான் பிறந்த திதி. ஒரு பிம்மசாரிக்கு தாம்பூலத்துடன் உணவளிக்க வேண்டும். நல்ல வெற்றியை தரும். முருக பெருமானை வழிபட வேண்டும். 

7.சப்தமி : இது சூரிய பகவான் பிறந்த திதி [ ரத சப்தமி]. ஒவ்வொரு சப்தமியிலும் சூரிய பகவானை வழிபட நல்ல ஆரோக்யம் உண்டாகும். 

8.அஷ்டமி : இது துர்கா தேவியின் எட்டு அவதாரங்கள் பிறந்த திதி. அஷ்டமி நாளில் துர்கா தேவியை வழிபட்டால் எதிரி பயம் நீங்கும். 

9.நவமி : நவமி என்பது ஸ்ரீ ராமர் பிறந்த திதி. ஸ்ரீ ராமனை வழிபட நன்மை. 

10.தசமி : தசமி என்பது திசைகள் தோன்றி நாள். அஷ்ட திக்பாலகர்களை வழிபட வேண்டும். 

11.ஏகாதசி : செல்வத்தின் கடவுளான குபேரன் பிறந்த திதி. 

12.துவாதசி : வாமன அவதாரம் எடுத்த திதி. 

13.திரியோதசி : இந்த திதியில் தர்மம் பிறந்தது. 

14.சதுர்தசி : சிவனுக்கு ருத்ராபிஷேகம் செய்து வழிபட நன்மை

15.அமாவாசை : முன்னோர்கள் சாந்தபடுத்த முக்கியமான திதி. தர்ப்பணம் செய்ய நன்மை


பெளர்ணமி : சந்திரன் இந்த நாளை ஆட்சி செய்கிறது. விரதம் இருந்து சந்திரனை வழிபட நன்மை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கிரஹங்களும் அதன் மரங்களும்

  பெரிய மரங்கள், மருந்து செடிகள், கோதுமை, நெல், வேர்க்கடலை, தென்னை, ஜாதிக்காய், மசாலா செடிகள், ஓமம், மிளகு, பெரிய காடுகள், நெல்லி, மணிபுங்கம...