இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 31 ஜூலை, 2023

கடக ராசிக்கு பயன் தரும் வாழ்நாள் பரிகாரங்கள்..

 

ராசி மண்டலத்தில் இடம்பெற்றுள்ள நான்காவது ராசி கடகம். கடக ராசியின் அதிபதி சந்திரன்.

கடகத்திற்கு செவ்வாய் மற்றும் குரு நட்பு கிரகங்கள். அதிலும், கடகத்திற்கு செவ்வாய் முழு சுபர்.

சுக்கிரன் மற்றும் சனி பகை கிரகங்கள். மற்றவை சம நிலையில் உள்ள கிரகங்கள் ஆகும்.

ஆகவே, நட்பு கிரகங்களின் காரகத்துவம் உள்ள பொருட்கள், நிறங்கள், இடங்கள் போன்றவை கடகத்திற்கு நன்மை பயக்கும். பகை கிரகங்களின் காரகத்துவங்கள் நன்மை அளிக்காது.

அதன்படி, குருவுக்குரிய மஞ்சள் மற்றும் செவ்வாய்க்குரிய சிவப்பு நிற ஆடைகள் மற்றும் கைக்குட்டைகளை பயன்படுத்துவது நல்லது.

அதேபோல், சுக்கிரனுக்கு உரிய பிங்க், சனிக்கு உரிய நீல நிற ஆடைகள் மற்றும் கைக்குட்டைகளை தவிர்ப்பது நல்லது.

தடைகள் மற்றும் இடையூறுகளை அகற்ற, பிங்க் மற்றும் நீல நிறத்தில் உள்ள அரையடி நீள ரிப்பன்களை எடுத்துக்கொண்டு, வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில், அதை கத்தரிக்கோலால் துண்டு, துண்டாக வெட்டிப் போடலாம்.

அதேபோல், மொச்சை மற்றும் எள் ஆகியவற்றை வெள்ளி அல்லது சனிக்கிழமைகளில் ஒரு கல்லில் வைத்து இடித்து போடலாம்.

மேலும், சுக்கிரன் மற்றும் சனியின் காரகத்துவம் கொண்ட கோயில்களுக்கு, செல்வதை கடக ராசிக்காரர்கள் தவிர்ப்பது நல்லது.

இவை அனைத்தும் அனுபவம் நிறைந்த ஜோதிடர்கள் கண்டறிந்த  எளிய பரிகார முறைகள் ஆகும்.

கடகம் என்பது, தாய்க்கிரகம் என்று சொல்லப்படும் சந்திரனின் சொந்த வீடு. ஒரு தாய் தமது வீட்டில் உள்ள அனைத்து உறவுகளையும் கண்போல காக்கும் தன்மை கொண்டவள்.

அதேபோல், சந்திரனும் ராசி மண்டலத்தில் உள்ள அனைத்து கிரகங்களையும், 27 நாட்களுக்கு ஒரு முறை சந்திக்கும் கிரகமாகும்.

ஒரு தலைவன் என்பவன், பெண்ணின் மனநிலை கொண்டவனாக இருக்க வேண்டும் என்று அறிஞர்கள் கூறுகின்றனர். பெண்ணின் மனநிலை என்பது இங்கே ஒரு தாயின் மனநிலை என்பதாகும்.

அதன் காரணமாகவே, கடக ராசி அல்லது கடக லக்னத்தில் பிறந்த பலர் மிகச்சிறந்த தலைவர்களாக விளங்குகின்றனர்.

வடஇந்தியாவின் மிகப்பழமையான லால் கிதாப் என்ற சிவப்பு நூல் கடக ராசிக்கு கூறும் பரிகாரங்கள் சிலவற்றை பார்ப்போம்.

கடக ராசிக்காரர்கள் செம்பு நட்டுக்கள் மற்றும் போல்டுகள் போட்ட கட்டிலை பயன்படுத்துவது நல்லது.

மக்கள் சேவைக்காகவே பிறந்த கடக ராசிக்காரர்கள், ஏழை எளியவர்களின் மருத்துவ செலவை ஏற்கலாம். அவர்களுக்கு இலவசமாக மருந்து மாத்திரைகளை வாங்கி கொடுக்கலாம்.

அதேபோல், மக்கள் பங்கேற்கும் பொதுவான விழாக்களில் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுப்பது நல்லது.

பெளர்ணமியன்று, தாயாரிடம் இருந்து ஒரு வெள்ளி நாணயத்தையும், கொஞ்சம் பச்சரிசியையும் வாங்கி, அதை வெள்ளை துணியில் முடிந்து பணப்பெட்டி அல்லது பீரோவில் வைத்தால் பணப்பஞ்சம் வராது என்றும் லால் கிதாப் கூறுகிறது.

அடுத்து,  கடக ராசி அல்லது கடக  லக்னத்திற்கு, சந்திரனுக்கு உரிய முத்து, குருவுக்கு உரிய கனக புஷ்ப ராகம், செவ்வாய்க்கு உரிய பவழம் ஆகிய ரத்தினங்கள் உகந்தவையாக சொல்லப்படுகின்றன.

ராசிக்கற்களை அணியும்போது, அனுபவம் நிறைந்த ஜோதிடர்களின் ஆலோசனைப்படி, குறை இல்லாத ரத்தினங்களை தேர்வு செய்து  அணிய வேண்டும்.

ஒவ்வொருவரின் தனிப்பட்ட ஜாதகம் மற்றும் தசா புத்திகளை பொறுத்து, அவர்களுக்கு சாதகமான பலன்களோ அல்லது பாதகமான பலன்களோ நடக்கலாம்.

இருந்தாலும், மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்களை அகற்றி நேர்மறை எண்ணங்களை வளர்ப்பது அனைவருக்கும் நன்மை தரும். அதுவே, விதியை மதியால் வெல்லும் ரகசியம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கிரஹங்களும் அதன் மரங்களும்

  பெரிய மரங்கள், மருந்து செடிகள், கோதுமை, நெல், வேர்க்கடலை, தென்னை, ஜாதிக்காய், மசாலா செடிகள், ஓமம், மிளகு, பெரிய காடுகள், நெல்லி, மணிபுங்கம...