இந்த வலைப்பதிவில் தேடு
திங்கள், 31 ஜூலை, 2023
மன அடக்கம் தரும் அஸ்வாரூடா வராகி என்ற குதிரைக்காரி...
மீன ராசிக்கு பயன் தரும் வாழ்நாள் பரிகாரங்கள்..
ராசி மண்டலத்தில் இடம்பெற்றுள்ள கடைசி ராசி மீனம். மீன ராசியின் அதிபதி குரு.
மீன ராசிக்கு சந்திரனும் செவ்வாயும் நட்பு கிரகங்கள். புதனும் சுக்கிரனும் பகை கிரகங்கள்.
ஆகவே, நட்பு கிரகங்களின் காரகத்துவம் உள்ள பொருட்கள், நிறங்கள், இடங்கள் போன்றவை நன்மை பயக்கும். பகை கிரகங்களின் காரகத்துவங்கள் நன்மை அளிக்காது.
அதன்படி, சந்திரனுக்கு உரிய வெள்ளை, செவ்வாய்க்கு உரிய சிவப்பு நிற ஆடைகள் மற்றும் கைக்குட்டைகளை பயன்படுத்துவது நல்லது.
சுக்கிரனுக்கு உரிய பிங்க், புதனுக்கு உரிய பச்சை நிறங்களை கூடுமானவரை தவிர்ப்பது நல்லது.
தடைகள் மற்றும் இடையூறுகள் அகல, பச்சை மற்றும் பிங்க் நிறத்தில் உள்ள அரையடி நீள ரிப்பன்களை எடுத்து, புதன் மற்றும் வெள்ளிக்கிழமையில் கத்தரிக்கோலால் துண்டு துண்டாக வெட்டிப் போடலாம்.
அதேபோல், பச்சை பயறு மற்றும் மொச்சையை கொஞ்சம் எடுத்து, புதன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் ஒரு கல்லில் வைத்து இடித்து போடலாம்.
மேலும், புதன் மற்றும் சுக்கிரன் ஆதிக்கம் நிறைந்த கோயில்களுக்கு அடிக்கடி செல்வதை தவிர்க்க வேண்டும்.
இவை அனைத்தும் அனுபவம் நிறைந்த ஜோதிடர்கள் கண்டறிந்த எளிய பரிகார முறைகள் ஆகும்.
வடஇந்தியாவின் மிகப்பழமையான லால் கிதாப் என்ற சிவப்பு நூல் மீன ராசிக்கு கூறும் பரிகாரங்கள் சிலவற்றை பார்ப்போம்.
கையில் அல்லது சட்டைப்பையில் சிவப்பு நிற சுவஸ்திக் படம் வைத்து கொள்வது நல்லது.
எக்காரணம் கொண்டும் வீட்டில் துளசிச்செடி வளர்க்க கூடாது. அது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். துளசிச்செடி புதனின் காரகத்துவம் என்பதால் அவ்வாறு கூறப்பட்டிருக்கலாம்.
அதேபோல், வீட்டின் முன்புறம் கழிவுநீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மீனம் சுனை நீரை குறிக்கும், குரு தூய்மையை குறிக்கும் என்பதால் அவ்வாறு சொல்லப்பட்டிருக்கலாம்.
ஒரு மஞ்சள் துணியில் தங்க நாணயத்தை முடிந்து, அதை பீரோ அல்லது பணப்பெட்டியில் வைத்துக் கொள்ள செல்வம் பெருகும்.
கைக்கடிகாரத்தை வலது கையில் அணிவது நல்லது. கோழி குஞ்சுகளுக்கு இரை போடுதல் நன்மை பயக்கும்.
அடுத்து மீன ராசி மற்றும் லக்னத்திற்கு, குருவுக்கு உரிய கனக புஷ்பராகம், செவ்வாய்க்கு உரிய பவழம், சந்திரனுக்கு உரிய முத்து ஆகியவை உகந்த ரத்தினங்கள் ஆகும்.
ராசிக்கற்களை அணியும்போது, அனுபவம் நிறைந்த ஜோதிடர்களின் ஆலோசனைப்படி, குறை இல்லாத கற்களை தேர்வு செய்து அணிய வேண்டும்.
அவரவருக்கு நடக்கும் தசா புத்திகள் மற்றும் கோச்சார கிரக நிலைகள் காரணமாக, பலன்கள் சாதகமாகவே அல்லது பாதகமாகவோ இருக்கலாம்.
இருந்தாலும், மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்களை அகற்றி நேர்மறை எண்ணங்களை வளர்ப்பது அனைவருக்கும் நன்மை தரும். அதுவே, விதியை மதியால் வெல்லும் ரகசியம்.
கும்ப ராசிக்கு பயன் தரும் வாழ்நாள் பரிகாரங்கள்..
ராசி மண்டலத்தில் இடம்பெற்றுள்ள பதினோராவது ராசி கும்பம். கும்ப ராசியின் அதிபதி சனி பகவான்.
கும்ப ராசிக்கு, இரண்டுக்கும் பதினொன்றுக்கும் உரிய குருவே முழுமையான நட்பு கிரகம். மூன்றுக்கும் பத்துக்கும் உரிய செவ்வாய் ஓரளவு நல்ல பலனை தரக்கூடிய கிரகம் ஆகும்.
கும்பத்திற்கு சுக்கிரன் பாதகாதிபதியாகவும், புதன் எட்டாம் அதிபதியாகவும் இருப்பதால் பெரிய அளவில் பலன் தருவதில்லை.
ஆகவே, நட்பு கிரகங்களின் காரகத்துவம் உள்ள பொருட்கள், நிறங்கள், இடங்கள் போன்றவை நன்மை பயக்கும். பகை கிரகங்களின் காரகத்துவங்கள் நன்மை அளிக்காது.
அதன்படி, குருவுக்கு உரிய மஞ்சள் நிற ஆடைகள் மற்றும் கைக்குட்டைகளை பயன்படுத்துவது நல்லது.
சுக்கிரனுக்கு உரிய பிங்க், புதனுக்கு உரிய பச்சை நிறங்களை கூடுமானவரை தவிர்ப்பது நல்லது.
தடைகள் மற்றும் இடையூறுகள் அகல, பிங்க் நிறத்தில் உள்ள அரையடி நீள ரிப்பனை எடுத்து, வெள்ளிக்கிழமையில் கத்தரிக்கோலால் துண்டு துண்டாக வெட்டிப் போடலாம்.
அதேபோல், மொச்சையை கொஞ்சம் எடுத்து, வெள்ளிக் கிழமைகளில் ஒரு கல்லில் வைத்து இடித்து போடலாம்.
மேலும், சுக்கிரன் ஆதிக்கம் நிறைந்த கோயில்களுக்கு அடிக்கடி செல்வதை தவிர்க்க வேண்டும்.
இவை அனைத்தும் அனுபவம் நிறைந்த ஜோதிடர்கள் கண்டறிந்த எளிய பரிகார முறைகள் ஆகும்.
வடஇந்தியாவின் மிகப்பழமையான லால் கிதாப் என்ற சிவப்பு நூல் தனுசு ராசிக்கு கூறும் பரிகாரங்கள் சிலவற்றை பார்ப்போம்.
கையிலோ அல்லது கழுத்திலோ முடிந்தவரை கொஞ்சம் தங்கம் அணிவது நல்லது.
குங்குமப்பூவை அரைத்து குழைத்து, நெற்றியில் திலகமிட செல்வ வளம் பெருகும்.
சதுர வடிவிலான வெள்ளி டாலரை நூல் அல்லது செயினில் கோர்த்து கழுத்தில் அணிந்தால், தொழில் மற்றும் பணிகளில் உயர்ந்த நிலை அமையும்.
ஏழைகள் மற்றும் கோவில்களுக்கு எண்ணெய் தானம் செய்தல் நல்லது.
அடுத்து கும்ப ராசி மற்றும் லக்னத்திற்கு, சனிக்குரிய நீலக்கல், குருவுக்குரிய கனக புஷ்பராகம் ஆகியவை உகந்த ரத்தினங்கள் ஆகும்.
ராசிக்கற்களை அணியும்போது, அனுபவம் நிறைந்த ஜோதிடர்களின் ஆலோசனைப்படி, குறை இல்லாத ரத்தினங்களை தேர்வு செய்து அணிய வேண்டும்.
அவரவருக்கு நடக்கும் தசா புத்திகள் மற்றும் கோச்சார கிரக நிலைகள் காரணமாக, பலன்கள் சாதகமாகவே அல்லது பாதகமாகவோ இருக்கலாம்.
இருந்தாலும், மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்களை அகற்றி நேர்மறை எண்ணங்களை வளர்ப்பது அனைவருக்கும் நன்மை தரும். அதுவே, விதியை மதியால் வெல்லும் ரகசியம்.
மேஷ ராசிக்கு பயன் தரும் வாழ்நாள் பரிகாரங்கள்..
ராசி மண்டலத்தில் இடம்பெற்றுள்ள முதல் ராசி மேஷம். மேஷ ராசியின் அதிபதி செவ்வாய்.
மேஷத்திற்கு சூரியன், சந்திரன், குரு ஆகியவை நட்பு கிரகங்கள். சுக்கிரன், புதன், சனி ஆகியவை பகை கிரகங்கள்.
நட்பு கிரகங்களின் காரகத்துவம் உள்ள பொருட்கள், நிறங்கள், இடங்கள் போன்றவை நன்மை பயக்கும். பகை கிரகங்களின் காரகத்துவங்கள் நன்மை அளிக்காது.
அதன்படி, சந்திரனுக்குரிய வெண்மை, குருவுக்குரிய மஞ்சள், சூரியனுக்கு உரிய ஆரஞ்சு நிறங்களில் ஆடைகள் மற்றும் கைக்குட்டைகளை பயன்படுத்தலாம்.
அதேபோல், புதனுக்கு உரிய பச்சை, சுக்கிரனுக்கு உரிய பிங்க், சனிக்கு உரிய நீல நிற ஆடைகள் மற்றும் கைக்குட்டைகளை தவிர்க்கலாம்.
தடைகள் மற்றும் இடையூறுகளை அகற்ற, பச்சை, பிங்க் மற்றும் நீல நிறங்களில் உள்ள அரையடி நீல ரிப்பன்களை எடுத்துக்கொண்டு, புதன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில், அவற்றை கத்தரிக்கோலால் துண்டு, துண்டாக வெட்டிப் போடலாம்.
அதேபோல், பச்சை பயறு, மொச்சை, எள் ஆகியவற்றை, மேற்கண்ட நாட்களில் ஒரு கல்லில் வைத்து இடித்து போடலாம்.
இவை அனைத்தும் அனுபவம் நிறைந்த ஜோதிடர்கள் கண்டறிந்த எளிய பரிகார முறைகள் ஆகும்.
மேஷ ராசி மற்றும் மேஷ லக்னத்தில் பிறந்தவர்கள், புதன், சுக்கிரன் மற்றும் சனியின் ஆதிக்கம் நிறைந்த கோயில்களுக்கு செல்வதை தவிர்க்கலாம்.
இதுதவிர, வடஇந்தியாவின் பழங்கால ஜோதிட நூலான லால் கிதாப் என்னும் சிவப்பு புத்தகத்தில், மேஷ ராசிக்கு சொல்லப்பட்டுள்ள பரிகாரங்களை பார்ப்போம்.
மேஷ ராசிக்காரர்கள், வீட்டில் எலுமிச்சை செடி வளர்க்கக் கூடாது என்று லால் கிதாப்பில் கூறப்பட்டுள்ளது.
எலுமிச்சை பழத்தின் ருசியானது சுக்கிரனின் காரகத்துவமான, புளிப்பு சுவையை கொண்டிருப்பதால் அப்படி கூறி இருக்கலாம்.
மேலும், தாயார் மற்றும் ஆன்மீக பெரியவர்களுக்கு முடிந்த வரையில் உதவி செய்ய வேண்டும்.
அதேபோல், இரவு உறங்கும்போது, தலைமாட்டில் ஒரு சொம்பில் நீரை வைத்துக்கொண்டு உறங்க வேண்டும்.
விடிந்த பின்னர், அந்த நீரை ஏதேனும் ஒரு செடிக்கு தொடர்ந்து ஊற்றி வரவேண்டும் என்றும் லால் கிதாப் கூறுகிறது.
அடுத்து, மேஷ ராசிக்காண ராசிக்கற்களை பற்றி பார்ப்போம்.
செவ்வாய்க்கு உரிய பவழம், சூரியனுக்கு உரிய மாணிக்கம், குருவுக்கு உரிய கனக புஷ்பராகம், சந்திரனுக்கு உரிய முத்து ஆகியவை, மேஷ ராசிக்கு உகந்த ரத்தினங்கள் ஆகும்.
ராசிக்கற்கள் அணியும் போது அனுபவம் நிறைந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி, குறை இல்லாத ரத்தினங்களை தேர்ந்தெடுத்து அணிவது அவசியமாகும்.
யோகங்களும், தோஷங்களும் இணைந்ததுதான் ஜாதகம். அதேபோல், நடக்கும் தசா புத்திகள், கோச்சார கிரக நிலைகள் போன்றவற்றுக்கு ஏற்ப, ஒவ்வொருவருக்கும் நடக்கும் பலன்கள் மாறுபடும்.
எனவே, மனதில் உள்ள எதிர்மறை சிந்தனைகளை அகற்றி, பாசிடிவ் சிந்தனைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். இதுதான் விதியை மதியால் வெல்லும் ரகசியம்.
ரிஷப ராசிக்கு பயன் தரும் வாழ்நாள் பரிகாரங்கள்..
ரிஷப ராசியினர், கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவித்து வரும் கஷ்டங்களே அதற்கு முக்கிய காரணம்.
பொதுவாக, ரிஷப ராசிக்கு ஏழரை சனியை விட, ஆறு, ஏழு மற்றும் எட்டாம் இடங்களில் வரும் கோச்சார சனியே, அதிக பாதிப்புகளை தருவார்.
அதன்படி, கோச்சார சனி துலாம் ராசிக்கு வந்த காலகட்டத்தில் இருந்தே, ரிஷப ராசிக்கு கஷ்டங்கள் ஆரம்பம் ஆகிவிட்டன.
ஆனால், ஆறாம் இடமான துலாம் ராசிக்கு வரும் சனி, அள்ளிக்கொடுப்பார் என்றே பலரும் பலன் கூறினார்கள்.
உண்மை அதுவல்ல. ரிஷப ராசிக்கு ஒன்பது மற்றும் பத்தாம் இடங்களுக்கு உரிய தர்ம கர்மாதிபதியான சனி, ஆறாம் இடத்தில் மறையும்போது, தொழிலுக்கும், வருமானத்துக்கும் இடையூறு ஏற்படுத்தி முடக்கி விட்டார் என்பதே உண்மை.
அடுத்து, ஏழாம் இடமான விருச்சிகத்தில் கண்ட சனியாகவும், எட்டாம் இடமான தனுசில் அஷ்டம சனியாகவும் இருந்து ரிஷப ராசிக்காரர்களை மிகவும் நோகடித்து விட்டார்.
இதுதான், ரிஷப ராசிக்காரர்களின் தொடர்ந்து அனுபவித்து வரும் கஷ்டங்களுக்கு முக்கிய காரணம். இதை, யாரும் தெளிவாக கூறவில்லை.
ஆனால், தற்போது கும்பத்திற்கு வந்துள்ள சனி பகவான், உங்களுடைய கஷ்டங்களுக்கு கொஞ்சம், கொஞ்சமாக முற்றுப்புள்ளி வைத்து, விரைவில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்துவார். அதனால், நம்பிக்கை இழக்க கூடாது.
ஒன்பதாம் இடமான மகரம் ரிஷபத்திற்கு பாதக ஸ்தானமாக இருந்தாலும், அது சனி பகவானுக்கு சொந்த வீடு, அத்துடன், ரிஷப ராசிக்கு சனியே யோக காரகன். அதனால், நீங்கள் விரைவில் நல்ல மாற்றத்தை சந்திப்பீர்கள். கவலை வேண்டாம்.
இனி, ரிஷப ராசிக்கான பரிகாரங்களை பார்ப்போம்.
ராசி மண்டலத்தில் இடம்பெற்றுள்ள இரண்டாவது ராசி ரிஷபம். ரிஷப ராசியின் அதிபதி சுக்கிரன்.
ரிஷபத்திற்கு புதன் மற்றும் சனியே நட்பு கிரகங்கள். குரு பகை கிரகமாகும்.
சூரியன் நான்காம் அதிபதியாக இருந்தாலும் சுப பலன்களை தருவதில்லை. பாதகதிபதியாக இருந்தாலும், சனியே யோகத்தை தரக்கூடியவர்.
ஆகவே, நட்பு கிரகங்களின் காரகத்துவம் உள்ள பொருட்கள், நிறங்கள், இடங்கள் போன்றவை ரிஷபத்திற்கு நன்மை பயக்கும். பகை கிரகங்களின் காரகத்துவங்கள் நன்மை அளிக்காது.
அதன்படி, சுக்கிரனுக்கு உரிய பிங்க், புதனுக்கு உரிய பச்சை, சனிக்கு உரிய நீலம் ஆகிய நிறங்களில் உடைகள் மற்றும் கைக்குட்டைகளை பயன்படுத்தலாம்.
அதேபோல், குருவுக்கு உரிய மஞ்சள், சூரியனுக்கு உரிய ஆரஞ்சு நிறங்கள் கொண்ட ஆடைகள் மற்றும் கைக்குட்டைகளை தவிர்க்கலாம்.
தடைகள் மற்றும் இடையூறுகளை அகற்ற, மஞ்சள் நிறத்தில் உள்ள அரையடி நீல ரிப்பனை எடுத்துக்கொண்டு, வியாழக்கிழமைகளில் அதை கத்தரிக்கோலால் துண்டு, துண்டாக வெட்டிப் போடலாம்.
அதேபோல், கொண்டை கடலையை வியாழக்கிழமை அன்று, ஒரு கல்லில் வைத்து இடித்து போடலாம்.
இவை அனைத்தும் அனுபவம் நிறைந்த ஜோதிடர்கள் கண்டறிந்த எளிய பரிகார முறைகள் ஆகும்.
ரிஷப ராசி மற்றும் ரிஷப லக்னத்தில் பிறந்தவர்கள், குருவின் காரகத்துவம் நிறைந்த கோயில்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.
ரிஷப ராசி சுக்கிரன் ஆட்சி பெறும் வீடு. அதேபோல், சந்திரன் உச்சம் பெறும் வீடு. அதனால், சந்திரன் மற்றும் சுக்கிரனின் ஆதிக்கம் நிறைந்த நீர், அரிசி, மற்றும் ஆடைகளுக்கு குறைவில்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
அதேபோல், அழகு, ஆடம்பரம் மற்றும் செல்வ செழிப்புக்கு காரகத்துவம் வகிக்கும் சுக்கிரனுக்கு, ரிஷபம் சொந்த வீடு என்பதால், முடிந்தவரை வாசனை திரவியங்களை பயன்படுத்துவது நன்மை பயக்கும்.
இதுதவிர, சிவப்பு புத்தகம் என்னும் லால் கிதாப்பில், ரிஷப ராசிக்கு சொல்லப்பட்டுள்ள பரிகாரங்களை பார்ப்போம்.
கணவன் மனைவிக்கு இடையே உள்ள சிக்கல்களுக்கு தீர்வு காண தத்தாத்ரேயரை வழிபட வேண்டும்.
அதேபோல், ஏதாவது ஒரு ஏழைக்கு பசு மாடு வாங்கி தானமாக வழங்க வேண்டும்.
அடுத்து யார் பிச்சை கேட்டாலும், இல்லை என்று சொல்லாமல் முடிந்த வரை தானம் வழங்க வேண்டும் என்றும் லால் கிதாப் கூறுகிறது.
அடுத்து, ரிஷப லக்னம் அல்லது ரிஷப ராசிக்காரர்கள், சுக்கிரனுக்கு உரிய வைரம், புதனுக்குரிய மரகதம், சனிக்குரிய நீலக்கல் ஆகியவற்றை அணியலாம்.
எனினும், ராசிக்கற்கள் அணியும்போது அனுபவம் நிறைந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி, குறை இல்லாத ரத்தினங்களையே அணிய வேண்டும்.
அதற்கு முன், மனதில் உள்ள நெகடிவ் சிந்தனைகளை அகற்றி, பாசிடிவ் சிந்தனைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். இதுதான் விதியை மதியால் வெல்லும் ரகசியம்.
மிதுன ராசிக்கு பயன் தரும் வாழ்நாள் பரிகாரங்கள்..
ராசி மண்டலத்தில் இடம்பெற்றுள்ள மூன்றாவது ராசி மிதுனம். மிதுன ராசிக்கு அதிபதி புதன்.
புதனுக்கு, சுக்கிரன் மற்றும் சனி நட்பு கிரகங்கள். குருவும் செவ்வாயும் பகை கிரகங்கள். மற்ற கிரகங்கள் சமநிலையில் உள்ளன.
ஆகவே, நட்பு கிரகங்களின் காரகத்துவம் உள்ள பொருட்கள், நிறங்கள், இடங்கள் போன்றவை மிதுனத்திற்கு நன்மை பயக்கும். பகை கிரகங்களின் காரகத்துவங்கள் நன்மை அளிக்காது.
அதன்படி, புதனுக்கு உரிய பச்சை, சுக்கிரனுக்கு உரிய பிங்க், சனிக்கு உரிய நீல நிறங்களில் ஆடை மற்றும் கைக்குட்டைகளை பயன்படுத்தலாம்.
அதேபோல், மஞ்சள் மற்றும் சிவப்பு நிற ஆடைகள் மற்றும் கைக்குட்டைகளை தவிர்க்க வேண்டும்.
தடைகள் மற்றும் இடையூறுகளை அகற்ற, சிவப்பு நிறம் மற்றும் மஞ்சள் நிறத்தில் உள்ள அரையடி நீல ரிப்பனை எடுத்துக்கொண்டு, செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் அதை கத்தரிக்கோலால் துண்டு, துண்டாக வெட்டிப் போடலாம்.
அதேபோல், துவரை மற்றும் கொண்டை கடலையை, செவ்வாய் மற்றும் வியாழக்கிழமை அன்று, ஒரு கல்லில் வைத்து இடித்து போடலாம்.
மிதுனம் என்பது ஆண்-பெண் சங்கமத்தை குறிக்கும் வீடு என்பதால், சிறு பறவைகள், அணில் போன்ற சிறு உயிரினங்கள், உங்கள் மனையில் தண்ணீர் மற்றும் உணவுகள் அருந்துவதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுக்கலாம்.
வீட்டில் குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்களை வாங்கிப்போட்டும், ஊஞ்சல் அமைத்தும் அண்டை வீட்டு குழந்தைகளும் விளையாடுவதை கண்டு ரசிப்பது நல்ல யோகத்தை தரும்.
ராசியின் அதிபதி புதன், பச்சை நிறத்தை குறிப்பதால், வீட்டில் செடி கொடிகளை முடிந்த அளவுக்கு வளர்ப்பது நல்லது. அதை நாடி வரும் பறவைகள் மற்றும் சிறு உயிரினங்களின் வாழ்த்து உங்களுக்கு கிடைக்கும்.
இவை அனைத்தும் அனுபவம் நிறைந்த ஜோதிடர்கள் கண்டறிந்த எளிய பரிகார முறைகள் ஆகும்.
அதேபோல், மிதுன லக்னத்தில் பிறந்தவர்கள், குருவின் ஆதிக்கம் கோயில்களுக்கு செல்வதை தவிர்க்கலாம்.
இதுதவிர, சிவப்பு புத்தகம் என்னும் லால் கிதாப்பில், மிதுன ராசிக்கு சொல்லப்பட்டுள்ள பரிகாரங்களை பார்ப்போம்.
வீட்டில் மணி பிளான்ட் வளர்க்க கூடாது என்று லால் கிதாப் கூறுகிறது. மணி பிளான்ட் என்பது மிதுன ராசிக்கு பதகாதிபதியான குருவின் காரகத்துவம் கொண்டுள்ளதால், அப்படிக் கூறி இருக்கலாம்.
அடுத்து, மிதுன ராசி அல்லது லக்னத்திற்கு, புதனுக்கு உரிய மரகதம், சுக்கிரனுக்கு உரிய வைரம், சனிக்கு உரிய நீலக்கல் ஆகியவை உகந்த ரத்தினங்கள் ஆகும்.
ராசிக்கற்களை அணியும்போது, அனுபவம் நிறைந்த ஜோதிடர்களின் ஆலோசனைப்படி, குறை இல்லாத ரத்தினங்களை தேர்வு செய்து அணிய வேண்டும்.
அனைத்து ராசிகளும் பாசிடிவ் மற்றும் நெகடிவ் தன்மைகள் கொண்டவையே. அதனால், பாசிடிவ் தன்மைகளை அதிகரிப்பதும், நெகடிவ் தன்மைகளை குறைப்பதும், உங்கள் மனதை பக்குவப்படுத்தும்.
எனவே, மனதில் உள்ள எதிர்மறை சிந்தனைகளை அகற்றி, பாசிடிவ் சிந்தனைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். இதுதான் விதியை மதியால் வெல்லும் ரகசியம்.
கடக ராசிக்கு பயன் தரும் வாழ்நாள் பரிகாரங்கள்..
ராசி மண்டலத்தில் இடம்பெற்றுள்ள நான்காவது ராசி கடகம். கடக ராசியின் அதிபதி சந்திரன்.
கடகத்திற்கு செவ்வாய் மற்றும் குரு நட்பு கிரகங்கள். அதிலும், கடகத்திற்கு செவ்வாய் முழு சுபர்.
சுக்கிரன் மற்றும் சனி பகை கிரகங்கள். மற்றவை சம நிலையில் உள்ள கிரகங்கள் ஆகும்.
ஆகவே, நட்பு கிரகங்களின் காரகத்துவம் உள்ள பொருட்கள், நிறங்கள், இடங்கள் போன்றவை கடகத்திற்கு நன்மை பயக்கும். பகை கிரகங்களின் காரகத்துவங்கள் நன்மை அளிக்காது.
அதன்படி, குருவுக்குரிய மஞ்சள் மற்றும் செவ்வாய்க்குரிய சிவப்பு நிற ஆடைகள் மற்றும் கைக்குட்டைகளை பயன்படுத்துவது நல்லது.
அதேபோல், சுக்கிரனுக்கு உரிய பிங்க், சனிக்கு உரிய நீல நிற ஆடைகள் மற்றும் கைக்குட்டைகளை தவிர்ப்பது நல்லது.
தடைகள் மற்றும் இடையூறுகளை அகற்ற, பிங்க் மற்றும் நீல நிறத்தில் உள்ள அரையடி நீள ரிப்பன்களை எடுத்துக்கொண்டு, வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில், அதை கத்தரிக்கோலால் துண்டு, துண்டாக வெட்டிப் போடலாம்.
அதேபோல், மொச்சை மற்றும் எள் ஆகியவற்றை வெள்ளி அல்லது சனிக்கிழமைகளில் ஒரு கல்லில் வைத்து இடித்து போடலாம்.
மேலும், சுக்கிரன் மற்றும் சனியின் காரகத்துவம் கொண்ட கோயில்களுக்கு, செல்வதை கடக ராசிக்காரர்கள் தவிர்ப்பது நல்லது.
இவை அனைத்தும் அனுபவம் நிறைந்த ஜோதிடர்கள் கண்டறிந்த எளிய பரிகார முறைகள் ஆகும்.
கடகம் என்பது, தாய்க்கிரகம் என்று சொல்லப்படும் சந்திரனின் சொந்த வீடு. ஒரு தாய் தமது வீட்டில் உள்ள அனைத்து உறவுகளையும் கண்போல காக்கும் தன்மை கொண்டவள்.
அதேபோல், சந்திரனும் ராசி மண்டலத்தில் உள்ள அனைத்து கிரகங்களையும், 27 நாட்களுக்கு ஒரு முறை சந்திக்கும் கிரகமாகும்.
ஒரு தலைவன் என்பவன், பெண்ணின் மனநிலை கொண்டவனாக இருக்க வேண்டும் என்று அறிஞர்கள் கூறுகின்றனர். பெண்ணின் மனநிலை என்பது இங்கே ஒரு தாயின் மனநிலை என்பதாகும்.
அதன் காரணமாகவே, கடக ராசி அல்லது கடக லக்னத்தில் பிறந்த பலர் மிகச்சிறந்த தலைவர்களாக விளங்குகின்றனர்.
வடஇந்தியாவின் மிகப்பழமையான லால் கிதாப் என்ற சிவப்பு நூல் கடக ராசிக்கு கூறும் பரிகாரங்கள் சிலவற்றை பார்ப்போம்.
கடக ராசிக்காரர்கள் செம்பு நட்டுக்கள் மற்றும் போல்டுகள் போட்ட கட்டிலை பயன்படுத்துவது நல்லது.
மக்கள் சேவைக்காகவே பிறந்த கடக ராசிக்காரர்கள், ஏழை எளியவர்களின் மருத்துவ செலவை ஏற்கலாம். அவர்களுக்கு இலவசமாக மருந்து மாத்திரைகளை வாங்கி கொடுக்கலாம்.
அதேபோல், மக்கள் பங்கேற்கும் பொதுவான விழாக்களில் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுப்பது நல்லது.
பெளர்ணமியன்று, தாயாரிடம் இருந்து ஒரு வெள்ளி நாணயத்தையும், கொஞ்சம் பச்சரிசியையும் வாங்கி, அதை வெள்ளை துணியில் முடிந்து பணப்பெட்டி அல்லது பீரோவில் வைத்தால் பணப்பஞ்சம் வராது என்றும் லால் கிதாப் கூறுகிறது.
அடுத்து, கடக ராசி அல்லது கடக லக்னத்திற்கு, சந்திரனுக்கு உரிய முத்து, குருவுக்கு உரிய கனக புஷ்ப ராகம், செவ்வாய்க்கு உரிய பவழம் ஆகிய ரத்தினங்கள் உகந்தவையாக சொல்லப்படுகின்றன.
ராசிக்கற்களை அணியும்போது, அனுபவம் நிறைந்த ஜோதிடர்களின் ஆலோசனைப்படி, குறை இல்லாத ரத்தினங்களை தேர்வு செய்து அணிய வேண்டும்.
ஒவ்வொருவரின் தனிப்பட்ட ஜாதகம் மற்றும் தசா புத்திகளை பொறுத்து, அவர்களுக்கு சாதகமான பலன்களோ அல்லது பாதகமான பலன்களோ நடக்கலாம்.
இருந்தாலும், மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்களை அகற்றி நேர்மறை எண்ணங்களை வளர்ப்பது அனைவருக்கும் நன்மை தரும். அதுவே, விதியை மதியால் வெல்லும் ரகசியம்.
சிம்ம ராசிக்கு பயன் தரும் வாழ்நாள் பரிகாரங்கள்..
ராசி மண்டலத்தில் இடம்பெற்றுள்ள ஐந்தாவது ராசி சிம்மம். சிம்ம ராசியின் அதிபதி சூரியன்.
சிம்மத்திற்கு, புதன் மற்றும் குரு நட்பு கிரகங்கள், செவ்வாய் மற்றும் சனி பகை கிரகங்கள் ஆகும்.
ஆகவே, நட்பு கிரகங்களின் காரகத்துவம் உள்ள பொருட்கள், நிறங்கள், இடங்கள் போன்றவை நன்மை பயக்கும். பகை கிரகங்களின் காரகத்துவங்கள் நன்மை அளிக்காது.
அதன்படி, குருவுக்குரிய மஞ்சள், புதனுக்குரிய பச்சை நிறங்களில் ஆடைகள் மற்றும் கைக்குட்டைகளை பயன்படுத்துவது
செவ்வாய்க்கு உரிய சிவப்பு மற்றும் சனிக்கு உரிய நீல நிற ஆடைகள் மற்றும் கைக்குட்டைகளை தவிர்ப்பது நல்லது.
தடைகள் மற்றும் இடையூறுகள் அகல, சிவப்பு மற்றும் நீல நிறத்தில் உள்ள அரையடி நீள ரிப்பன்களை எடுத்து, செவ்வாய் அல்லது சனிக்கிழமைகளில், கத்தரிக்கோலால் துண்டு துண்டாக வெட்டிப் போடலாம்.
அதேபோல், துவரை மற்றும் எள் ஆகியவற்றை கொஞ்சம் எடுத்து, செவ்வாய் அல்லது சனிக்கிழமைகளில் ஒரு கல்லில் வைத்து இடித்து போடலாம்.
மேலும், செவ்வாய் மற்றும் சனி ஆதிக்கம் நிறைந்த கோயில்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.
இவை அனைத்தும் அனுபவம் நிறைந்த ஜோதிடர்கள் கண்டறிந்த எளிய பரிகார முறைகள் ஆகும்.
லால் கிதாப் என்ற சிவப்பு நூல், சிம்ம ராசிக்கு கூறும் பரிகாரங்கள் சிலவற்றை பார்ப்போம்.
கண் பார்வையற்றவர்களுக்கு ஞாயிற்று கிழமைகளில் இனிப்பு வழங்குவது செல்வ நிலையை ஏற்படுத்தி தரும்.
உங்கள் பொருளாதார நிலைக்கு ஏற்ப, அன்னதானம் செய்பவர்களுக்கு அரிசி, பால் போன்றவற்றை வாங்கி கொடுப்பது நல்லது.
மற்றவர்களுக்கு செய்த உதவியையும், கொடுத்த கடனையும் வெளியில் சொல்லி திரிவது, தரித்திர நிலையை ஏற்படுத்தும் என்றும் லால் கிதாப் கூறுகிறது.
மது மற்றும் மாமிசத்தை தவிர்க்க வேண்டும் என்றும் லால் கிதாப் கூறுகிறது. அரசன் அனைத்து உயிர்களையும் காப்பதற்கு கடமைப்பட்டவன் என்பதால் அவ்வாறு கூறப்பட்டிருக்கலாம்.
ஏழு வகை தானியங்களை வாங்கி அதை ஒரு துணியில் முடிந்து, தலையில் வைத்து உறங்க வேண்டும். காலையில் எழுந்த பின்னர், அதை, எறும்பு போன்ற சிறு உயிரினங்களுக்கு போட வேண்டும். அவ்வாறு செய்தால், சமூகத்தில் நல்ல அந்தஸ்து கிடைக்கும் என்றும் லால் கிதாப் கூறுகிறது.
பொய் பேசுவதையும், மற்றவர்கள் மீது குற்றம் காண்பதையும் தவிர்த்து, கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற வேண்டும் என்றும் லால்கிதாப் கூறுகிறது.
அடுத்து, சிம்ம ராசி மற்றும் சிம்ம லக்னத்திற்கு, சூரியனுக்கு உரிய மாணிக்கமும், புதனுக்குரிய மரகதமும், குருவுக்கு உரிய கனக புஷ்பராகமும் உகந்த ரத்தினங்களாகும்.
ராசிக்கற்களை அணியும்போது, அனுபவம் நிறைந்த ஜோதிடர்களின் ஆலோசனைப்படி, குறை இல்லாத ரத்தினங்களை தேர்வு செய்து அணிய வேண்டும்.
ஒவ்வொருவரின் தனிப்பட்ட ஜாதகம் மற்றும் தசா புத்திகளை பொறுத்து, அவர்களுக்கு சாதகமான பலன்களோ அல்லது பாதகமான பலன்களோ நடக்கலாம்.
இருந்தாலும், மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்களை அகற்றி நேர்மறை எண்ணங்களை வளர்ப்பது அனைவருக்கும் நன்மை தரும். அதுவே, விதியை மதியால் வெல்லும் ரகசியம்..
கன்னி ராசிக்கு பயன் தரும் வாழ்நாள் பரிகாரங்கள்..
ராசி மண்டலத்தில் இடம்பெற்றுள்ள ஆறாவது ராசி கன்னி. கன்னி ராசியின் அதிபதி புதன்.
கன்னி ராசிக்கு சுக்கிரன் மற்றும் சனி நட்பு கிரகங்கள். செவ்வாயும், குருவும் பகை கிரகங்கள்.
ஆகவே, நட்பு கிரகங்களின் காரகத்துவம் உள்ள பொருட்கள், நிறங்கள், இடங்கள் போன்றவை நன்மை பயக்கும். பகை கிரகங்களின் காரகத்துவங்கள் நன்மை அளிக்காது.
அதன்படி, சுக்கிரனுக்கு உரிய பிங்க், சனிக்கு உரிய நீலம் ஆகிய நிறங்களில் ஆடைகள் மற்றும் கைக்குட்டைகளை பயன்படுத்தலாம்.
செவ்வாய்க்கு உரிய சிவப்பு, குருவுக்கு உரிய மஞ்சள் நிறங்களை ஆடைகள் மற்றும் கைக்குட்டைகளை தவிர்க்கலாம்.
தடைகள் மற்றும் இடையூறுகள் அகல, சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் உள்ள அரையடி நீள ரிப்பன்களை எடுத்து, செவ்வாய் அல்லது வியாழக்கிழமைகளில், கத்தரிக்கோலால் துண்டு துண்டாக வெட்டிப் போடலாம்.
அதேபோல், துவரை மற்றும் கொண்டைக்கடலை ஆகியவற்றை கொஞ்சம் எடுத்து, செவ்வாய் அல்லது வியாழக்கிழமைகளில் ஒரு கல்லில் வைத்து இடித்து போடலாம்.
மேலும், செவ்வாய் மற்றும் குரு ஆதிக்கம் நிறைந்த கோயில்களுக்கு அடிக்கடி செல்வதை தவிர்க்க வேண்டும்.
இவை அனைத்தும் அனுபவம் நிறைந்த ஜோதிடர்கள் கண்டறிந்த எளிய பரிகார முறைகள் ஆகும்.
வடஇந்தியாவின் மிகப்பழமையான லால் கிதாப் என்ற சிவப்பு நூல் கன்னி ராசிக்கு கூறும் பரிகாரங்கள் சிலவற்றை பார்ப்போம்.
மழை நீரை பிடித்து சேமித்து வைத்துக் கொள்வது நல்லது என்று லால் கிதாப் கூறுகிறது.
வீட்டில் பூஜை அறையை அடிக்கடி மாற்ற கூடாது என்றும் புத்தாடை அணியும் போது, அதில் கொஞ்சம் நீரை தெளித்து அணிந்தால், ஆடை அணிகலன்கள் அதிகம் சேரும் என்றும் லால் கிதாப் கூறுகிறது.
அதேபோல், கன்னி ராசிக்காரர்கள் புதன் கிழமைகளில் மற்றவர்களை திட்டக்கூடாது. யாருக்கும் வாக்குறுதி அளிக்க கூடாது என்றும் லால்கிதாப் கூறுகிறது.
அடுத்து, கன்னி ராசி மற்றும் லக்னத்திற்கு, புதனுக்கு உரிய மரகதம், சுக்கிரனுக்கு உரிய வைரமும், சனிக்கு உரிய நீலக்கல்லும் உகந்த ரத்தினங்களாகும்.
எனினும், ராசிக்கற்களை அணியும்போது, அனுபவம் நிறைந்த ஜோதிடர்களின் ஆலோசனைப்படி, குறை இல்லாத ரத்தினங்களையே அணிய வேண்டும்.
ஒவ்வொருவரின் தனிப்பட்ட ஜாதகம், நடக்கும் தசா புத்திகள், கோச்சார கிரக நிலைகளைப் பொறுத்து, அவர்களுக்கு சாதகமான பலன்களோ அல்லது பாதகமான பலன்களோ நடக்கலாம்.
இருந்தாலும், மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்களை அகற்றி நேர்மறை எண்ணங்களை வளர்ப்பது அனைவருக்கும் நன்மை தரும். அதுவே, விதியை மதியால் வெல்லும் ரகசியம்.
துலாம் ராசிக்கு பயன் தரும் வாழ்நாள் பரிகாரங்கள்..
ராசி மண்டலத்தில் இடம்பெற்றுள்ள ஏழாவது ராசி துலாம். துலாம் ராசியின் அதிபதி சுக்கிரன்.
துலாம் ராசிக்கு, சனியும், புதனும் நட்பு கிரகங்கள், குருவும், சூரியனும் பகை கிரகங்கள்.
ஆகவே, நட்பு கிரகங்களின் காரகத்துவம் உள்ள பொருட்கள், நிறங்கள், இடங்கள் போன்றவை நன்மை பயக்கும். பகை கிரகங்களின் காரகத்துவங்கள் நன்மை அளிக்காது.
அதன்படி, புதனுக்கு உரிய பச்சை, சனிக்கு உரிய நீல நிற ஆடைகள் மற்றும் கைக்குட்டைகளை பயன்படுத்தலாம்.
சூரியனுக்கு உரிய ஆரஞ்சு, குருவுக்கு உரிய மஞ்சள் நிற ஆடைகள் மற்றும் கைக்குட்டைகளை தவிர்க்கலாம்.
தடைகள் மற்றும் இடையூறுகள் அகல, ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறத்தில் உள்ள அரையடி நீள ரிப்பன்களை எடுத்து, ஞாயிறு அல்லது வியாழக்கிழமைகளில், கத்தரிக்கோலால் துண்டு துண்டாக வெட்டிப் போடலாம்.
அதேபோல், கோதுமை மற்றும் கொண்டைக்கடலை ஆகியவற்றை கொஞ்சம் எடுத்து, ஞாயிறு அல்லது வியாழக்கிழமைகளில் ஒரு கல்லில் வைத்து இடித்து போடலாம்.
மேலும், சூரியன் மற்றும் குரு ஆதிக்கம் நிறைந்த கோயில்களுக்கு அடிக்கடி செல்வதை தவிர்க்க வேண்டும்.
இவை அனைத்தும் அனுபவம் நிறைந்த ஜோதிடர்கள் கண்டறிந்த எளிய பரிகார முறைகள் ஆகும்.
வடஇந்தியாவின் மிகப்பழமையான லால் கிதாப் என்ற சிவப்பு நூல் துலாம் ராசிக்கு கூறும் பரிகாரங்கள் சிலவற்றை பார்ப்போம்.
கோயில் மற்றும் அன்னதானங்களுக்கு வெண்ணெய், தயிர், உருளைக்கிழங்கு போன்றவற்றை இலவசமாக வழங்க வேண்டும் என்றும் மற்றவர்களிடம் இருந்து எதையும் தானமாகப் பெறக்கூடாது என்றும் லால் கிதாப் கூறுகிறது.
வெள்ளிக்கிழமை தோறும் வீட்டில் பசுவின் கோமியம் தெளிப்பது நல்லது.
மாமியார் வீட்டில் இருந்து வெள்ளி பாத்திரம் அல்லது வெள்ளி நாணயத்தை வாங்கி வைத்துக் கொள்வது நல்லது என்றும் லால் கிதாப் கூறுகிறது.
அடுத்து, துலாம் ராசி மற்றும் லக்னத்திற்கு, சுக்கிரனுக்கு உரிய வைரமும், புதனுக்கு உரிய மரகதமும், சனிக்கு உரிய நீலக்கல்லும் உகந்த ரத்தினங்களாகும்.
எனினும், ராசிக்கற்களை அணியும்போது, அனுபவம் நிறைந்த ஜோதிடர்களின் ஆலோசனைப்படி, குறை இல்லாத கற்களை தேர்வு செய்து அணிய வேண்டும்.
ஒவ்வொருவருக்கும் நடக்கும் தசா புத்திகள் மற்றும் கோச்சார கிரக நிலைகள் காரணமாக, பலன்கள் சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ இருக்கலாம்.
இருந்தாலும், மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்களை அகற்றி நேர்மறை எண்ணங்களை வளர்ப்பது அனைவருக்கும் நன்மை தரும். அதுவே, விதியை மதியால் வெல்லும் ரகசியம்..
விருச்சிக ராசிக்கு பயன் தரும் வாழ்நாள் பரிகாரங்கள்..
ராசி மண்டலத்தில் இடம்பெற்றுள்ள எட்டாவது ராசி விருச்சிகம். விருச்சிக ராசியின் அதிபதி செவ்வாய்.
விருச்சிக ராசிக்கு குருவும், சூரியனும் நட்பு கிரகங்கள். சந்திரன், சனி, புதன் ஆகியவை பகை கிரகங்கள்.
ஆகவே, நட்பு கிரகங்களின் காரகத்துவம் உள்ள பொருட்கள், நிறங்கள், இடங்கள் போன்றவை நன்மை பயக்கும். பகை கிரகங்களின் காரகத்துவங்கள் நன்மை அளிக்காது.
அதன்படி, குருவுக்கு உரிய மஞ்சள், சூரியனுக்கு உரிய ஆரஞ்சு நிறங்கள் நன்மை அளிக்கும். சனிக்கு உரிய நீலமும் புதனுக்கு உரிய பச்சையும், சந்திரனுக்கு உரிய வெள்ளையும் நன்மை அளிக்காது.
ஆகவே, மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறத்தில் உள்ள ஆடைகள் மற்றும் கைக்குட்டைகளை பயன்படுத்துவது நல்லது.
நீலம், வெள்ளை மற்றும் பச்சை நிற ஆடைகள் மற்றும் கைக்குட்டைகளை தவிர்ப்பது நல்லது.
தடைகள் மற்றும் இடையூறுகள் அகல, வெள்ளை, பச்சை மற்றும் நீல நிறத்தில் உள்ள அரையடி நீள ரிப்பன்களை எடுத்து, திங்கள், புதன் அல்லது சனிக்கிழமைகளில், கத்தரிக்கோலால் துண்டு துண்டாக வெட்டிப் போடலாம்.
அதேபோல், பச்சரிசி, பச்சை பயறு மற்றும் எள் ஆகியவற்றை கொஞ்சம் எடுத்து, திங்கள், புதன் அல்லது சனிக்கிழமைகளில் ஒரு கல்லில் வைத்து இடித்து போடலாம்.
மேலும், சந்திரன், புதன் மற்றும் சனி ஆதிக்கம் நிறைந்த கோயில்களுக்கு அடிக்கடி செல்வதை தவிர்க்க வேண்டும்.
இவை அனைத்தும் அனுபவம் நிறைந்த ஜோதிடர்கள் கண்டறிந்த எளிய பரிகார முறைகள் ஆகும்.
வடஇந்தியாவின் மிகப்பழமையான லால் கிதாப் என்ற சிவப்பு நூல் விருச்சிக ராசிக்கு கூறும் பரிகாரங்கள் சிலவற்றை பார்ப்போம்.
மண் பத்திரங்களில் தேன் அல்லது குங்குமத்தை வைத்திருப்பது நல்லது.
செவ்வாய் கிழமைகளில் விரதம் இருப்பதுடன், அரச மரம் மற்றும் முள் செடிகளை வெட்டுதல் கூடாது.
பால் காய்ச்சும்போது பொங்கி வடியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மற்றவர்களிடம் இருந்து தானமாக எதையும் பெறக்கூடாது.
செவ்வாய் கிழமைகளில் தேன், குங்குமம் மற்றும் சிவப்பு ரோஜாக்களை ஓடும் நீர் அல்லது கடலில் விட துரதிர்ஷ்டங்கள் நீங்கும்.
செவ்வாய் கிழமையன்று இஷ்ட தெய்வத்திற்கு சிவப்பு பூந்தி படைத்து வழிபடுவது நல்லது.
அனுமனுக்கு செந்தூரம் மற்றும் வஸ்திரம் சாத்தி வழிபட கடன் மற்றும் வறுமை நீங்கும். நோய்களும் அகலும்.
அடுத்து விருச்சிக ராசி மற்றும் லக்னத்திற்கு, செவ்வாய்க்கு உரிய பவழமும், குருவுக்கு உரிய கனக புஷ்பராகமும், சூரியனுக்கு உரிய மாணிக்கமும் உகந்த ரத்தினங்கள் ஆகும்.
ராசிக்கற்களை அணியும்போது, அனுபவம் நிறைந்த ஜோதிடர்களின் ஆலோசனைப்படியே அணிய வேண்டும். அதுவும் குறை இல்லாத ரத்தினங்களையே அணிய வேண்டும்.
அவரவருக்கு நடக்கும் தசா புத்திகள் மற்றும் கோச்சார கிரக நிலைகள் காரணமாக, பலன்கள் சாதகமாகவே அல்லது பாதகமாகவோ இருக்கலாம்.
இருந்தாலும், மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்களை அகற்றி நேர்மறை எண்ணங்களை வளர்ப்பது அனைவருக்கும் நன்மை தரும். அதுவே, விதியை மதியால் வெல்லும் ரகசியம்.
கிரஹங்களும் அதன் மரங்களும்
பெரிய மரங்கள், மருந்து செடிகள், கோதுமை, நெல், வேர்க்கடலை, தென்னை, ஜாதிக்காய், மசாலா செடிகள், ஓமம், மிளகு, பெரிய காடுகள், நெல்லி, மணிபுங்கம...
-
புஷ்கர அம்சம் கிருத்திகை, உத்திரம், உத்திராடம் (1 மற்றும் 4ஆம் பாதம்) ரோகிணி, ஹஸ்தம், திருவோணம் ( 2ஆம் பாதம்) புனர்பூசம், விசாகம், பூரட்டாத...
-
*ஜோதிடத்தில் 27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்* ஜோதிட நட்புகளுக்காக இன்றைய பதிவு திருப்பதி திருமலையில் இருந்து. யோகம் என்பது வானத்தில...
-
மன்னார்குடிஜோதிட ஆசான் தெட்சிண் பாரத் வேண்டுகோளுக்கிணங்க. முதலில் உள்ள லக்னம் புஷ்கர நவாம்ச காலில் அமர்ந்துவிட்டால் தொடர்ந்து அவர்களுக்கு யோ...
-
*தன்னை இழக்க கூடிய, (ஒழுக்கமின்றி , நெறி தவறக்கூடிய அமைப்பு, விபச்சாரம், கீழ்நிலைப் ஆண், பெண்களின் தொடர்பு.) ஆண் பெண் இருவருக்கும்,எந்த சூ...
-
செல்வங்களுக்கு அதிபதியான குபேரன் ஆதிக்கம் செலுத்துவதே வடக்கு திசை என்கிறது வாஸ்து. வடக்கு பார்த்து கட்டப்படும் வீட்டிற்கான வாஸ்து பலன் முழ...
-
சனி பகவானுக்கு உண்டான பரிகாரம். நீலாஞ்ஜன ஸமாபாஸம் ரவிபுத்ரம் யமாக்ரஜம் ச்சாயா மார்த்தாண்ட ஸம்பூதம் தம் நமாமி ஸநைஸ்சரம் || ஓம் ...
-
முதல் வீடு : இதை வைத்து ஜாதகருடைய நிறம், உருவம், உயரம், குணாதிசயங்கள் முதலியவற்றை அறியலாம். ஜாதகர் ஒல்லியானவரா, இல்லை பருமனானவரா, கோபம் உ...
-
திதியில் வழிபட வேண்டிய தெய்வங்கள் 1.ப்ரதமை: அக்னி பகவான் வழிபாடு 2.துவிதியை : அஸ்வினி தேவதைகள் வழிபாடு. 1 வருடம் செய்தால் விதியா விரதம். 3.த...
-
சனி பகவான் 12 பாவங்களில் நின்ற பலன் 1 லக்னத்தில் சனி இருந்து வீடு கட்டினால் கடன் உண்டாகும். கஷ்டங்கள் ஏற்படும். லக்னத்தில் சனி இருந்து அதற்...
-
தெற்கு நோக்கிய வீடு வாஸ்து விதிகள் தெற்கு திசை நோக்கிய வீடுகளுக்கு பொருந்தும். வீடு வாங்குவோர் மத்தியில் பொதுவாகக் காணப்படும் கருத்து என்னவெ...
